Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- Acts - 039 (Tabernacle of Meeting)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Azeri -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- French -- Georgian -- Greek -- Hausa -- Igbo -- Indonesian -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Turkish -- Urdu? -- Uzbek -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

அப்போஸ்தலர் - கிறிஸ்துவின் வெற்றி பவனி
அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 1 - எருசலேம், யூதேயா, சமாரியா மற்றும் சிரியா ஆகிய பகுதிகளில் இயேசு கிறிஸ்துவின் திருச்சபை அடித்தளமிடல் - பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்பட்ட அப்போஸ்தலனாகிய பேதுருவின் திருப்பணி (அப்போஸ்தலர் 1 - 12)
அ - எருசலேமில் ஆதித்திருச்சபையின் தோற்றமும் வளர்ச்சியும் (அப்போஸ்தலர் 1 - 7)
21. ஸ்தேவானின் தன்னிலை வாதம் (அப்போஸ்தலர் 7:1-53)

இ) ஆசரிப்புக் கூடார கூடுகை, இறைவனின் ஆலயம் நிறுவப்படுதல் (அப்போஸ்தலர் 7:44-50)


அப்போஸ்தலர் 7:44-50
44 மேலும் நீ பார்த்த மாதிரியின்படியே சாட்சியின் கூடாரத்தை உண்டுபண்ணுவாயாக என்று மோசேயுடனே பேசினவர் கட்டளையிட்டபிரகாரமாக, அந்தக் கூடாரம் வனாந்தரத்திலே நம்முடைய பிதாக்களோடு இருந்தது.45 மேலும், யோசுவாவுடனேகூட நம்முடைய பிதாக்கள் அதைப் பெற்றுக்கொண்டு, தேவன் அவர்களுக்கு முன்பாகத் துரத்திவிட்ட புறஜாதிகளுடைய தேசத்தை அவர்கள் கட்டிக்கொள்ளுகையில், அதை அந்த தேசத்தில் கொண்டு வந்து தாவீதின் நாள்வரைக்கும் வைத்திருந்தார்கள்.46 இவன் தேவனிடத்தில் தயவு பெற்றபடியினால், யாக்கோபின் தேவனுக்கு ஒரு வாசஸ்தலத்தைத் தான் கட்டவேண்டுமென்று விண்ணப்பம்பண்ணினான்.47 சாலொமோனோ அவருக்கு ஆலயத்தைக் கட்டினான்.48 ஆகிலும் உன்னதமானவர் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசமாயிரார்.49 வானம் எனக்குச் சிங்காசனமும் பூமி எனக்குப் பாதபடியுமாயிருக்கிறது; எனக்காக நீங்கள் எப்படிப்பட்ட வீட்டைக் கட்டுவீர்கள்; நான் தங்கியிருக்கத்தக்க ஸ்தலம் எது;50 இவைகள் எல்லாவற்றையும் என்னுடைய கரம் உண்டாக்கவில்லையா என்று கர்த்தர் உரைக்கிறார் என்று தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே.

இறைவன் மகிமை நிறைந்த ஆலயத்தில் வாசம் பண்ணுவதில்லை என்பதை ஸ்தேவான் முதலில் உறுதி செய்தான். இறைவன் சாட்சியின் கூடாரத்தில் மோசேயை சந்தித்தான். குறிப்பாக இது தீர்க்கதரிசி மோசேயுடன் ஏற்படுத்திய உடன்படிக்கையின் நாட்களில் நடந்தேறியது. யோசுவாவின் வெற்றிகளின் காலம், தாவீதின் மறுமலர்ச்சி காலத்தில் அழிந்து போகும் அழகு மற்றும் கவர்ச்சித் தோற்றமுடைய ஆலயம் இல்லை. மக்கள் மத்தியில் இறைவனின் பிரசன்னம் இருப்பதை இது உறுதி செய்கிறது. வனாந்தரத்தில் கட்டப்பட்ட அழிந்து மறைந்து போகக்கூடிய சாட்சியின் கூடாரம் என்பது பழைய ஏற்பாட்டின் ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு மாறுகின்ற காலத்தை பிரதிபலிக்கிறது.

இறைவனுடைய கிருபை தான் ஆலயத்தை கட்டாதபடி தாவீதை தடுத்தது என்று ஸ்தேவான் கருதினார். இறைவனுக்கு பொன் தேவையில்லை என்பதை இது காட்டுகிறது. அவருக்கு மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டிடங்கள் அல்லது கட்டுமானங்கள் தேவையில்லை. அவரை பின்பற்றுபவர்கள் மத்தியில் அவர் வாழ்கிறார். இறைவன் எளிய மனிதனையும் சந்திக்கிறார் என்பதற்கு ஆதாரமாக வனாந்தரத்தில் இருந்த எளிமையான சாட்சியின் கூடாரம் இருந்தது. நற்செய்தியாளர் யோவான் தனது கிரேக்க மொழி நற்செய்தியில் (யோவான் 1:14) பொதுவான வார்த்தையான “லோகோஸ்” என்பதை இயேசுவின் தன்மையை விவரிக்கும் போது பயன்படுத்துகிறார். “லோகோஸ் அல்லது வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே கூடாரம் போட்டு தங்கினார். அல்லது நமக்குள்ளே வாசம் பண்ணினார்”. இந்த தாழ்மை இறைவனின் மாபெரும் கிருபையைக் காண்பிக்கிறது. அவர் கீழே இறங்கி வந்தார். நமது அழிந்துபோகும் சரீரமாகிய ஆலயத்தில் தங்குகிறார்.

ஞானம் நிறைந்த சாலமோன் நன்கு அறியப்பட்ட ஆலயத்தைக் கட்டினார். இந்தப் பெரிய நோக்கத்திற்காக மக்களை அவன் பயன்படுத்திக் கொண்டான். அவனுக்கு பின்பு தேசம் பிரிக்கப்பட்டது. அந்த ஆலயம் மக்களை இணைப்பதற்காக கட்டப்பட்டது. அது யூத வழிபாட்டு முறைமைகளுக்கும் மற்றும் கலாச்சாரத்திற்கும் மையமாக இருந்தது. ஆனால் விளைவோ பிரிவினையும், சிதறி போகுதலுமாகவும் இருந்தது. ஏனெனில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இறைவன் வசிப்பது இல்லை. அவர் கற்களில் தங்கியிருப்பதும் இல்லை. உங்களது அனைத்து பெட்டிகளும் (சூட்கேஸ்) உலகப்பொருட்களும் இறைவனுக்கு அவசியம் அற்றவை. கடல், நிலப்பகுதி, காற்று அல்லது நிலத்திற்கு அடியில் என்று நீ எங்கியிருந்தாலும் அவர் உன்னுடன் இருக்கிறார். அவருடைய வார்த்தையைக் கேட்டு, அதன்படி செய்கிறவர்கள் இறைவனின் பிரசன்னம் மற்றும் ஐக்கியத்தில் தொடர்ந்து இருக்கிறார்கள்.

தான் ஆலயத்திற்கு விரோதமாக தூஷணம் பண்ணவில்லை என்பதை நீதிபதிகளுக்கு முன்பு ஸ்தேவான் நிரூபித்தார். அவர் பொன்னான கற்களை ஆராதிக்கவில்லை. மனிதனின் சிறையில் உன்னதமானவர் வாழுவதில்லை. முழு பூமியும் அவருடைய பாதபடியாக உள்ளது. கைகளினால் செய்யப்பட்ட வீடுகளில் அவர் தங்கி இளைப்பாற வேண்டிய தேவை இல்லை. பரலோகம் மற்றும் பூமியையும் கடல் மற்றம் எல்லா நீரூற்றுகளையும் உண்டாக்கினவருக்கு எதுவும் தேவையாய் இருந்ததில்லை.

இன்று நாம் பூமி என்பது முழு பிரபஞ்சமும் அல்ல என்று அறிந்திருக்கிறோம். விண்வெளியில் நீந்திக் கொண்டிருக்கும் மில்லியின் கணக்கான சூரியன்களின் மத்தியில், பில்லியின் கணக்கான கோள்களின் கூட்டங்கள் மத்தியில் காணப்படும் தூசியின் ஒரு அணுவைப் போல பூமி உள்ளது. அருமையான சகோதரனே, பிரபஞ்சத்தின் இரகசியங்களுக்குள் ஆழமாகச் சென்று ஆராய்ந்து பாருங்கள். இப்படிச் செய்வதன் மூலம் உங்கள் உள்ளம் திறக்கப்படும். உங்கள் இருதயம் இறைவனின் மகத்துவம் மற்றும் கிருபையை ஆராதிக்கும். முழு உலகத்தையும் நிரப்புவராக நமது சிருஷ்டிகர் இருக்கிறார். அவரை உள்ளடக்கக் கூடிய எந்தவிதமான வீடும் இல்லை. எல்லா கடல்களும், நட்சத்திரங்களும் ஒன்றிணைந்தாலும் அவைகள் எல்லாவற்றையும் விட அவர் பெரியவர். அதே நேரத்தில் ஒவ்வொரு அணுவின் எலக்ட்ரானையும் அவர் கட்டுப்படுத்துகிறார். நவீன இயற்கை அறிவியலை கவனமாக கற்றுக்கொள்ளும் ஒவ்வொருவரும் நாத்திகவாதியாக மாறமாட்டார். அவர் தாழ்மையுடன் இறைவனை ஆராதிப்பவராக மாறுவார்.

மிகப்பெரிய இறைவன் உன்னுடைய இருதயத்தில் வாசம்பண்ணுவார் என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது. உனது சரீரம் பரிசுத்த ஆவியானவரின் ஆலயமாகும். உனது மனம் இறைவன் தங்கும் இடமாக மாறியிருக்கிறதா? அல்லது நீ அசுத்த ஆவிகள் தங்கும் குகையாக இருக்கிறாயா? நீ அவருடைய திட்டத்திற்கு உன் மனதை ஒப்புக்கொடுக்கும்போது கிறிஸ்துவின் இரத்தம் உன்னை சுத்தமாக்கம். உன் குளிர்ந்த சுயநலம் ஒழியும் போதும் பரிசுத்த ஆவியானவர் உன்னை நிரப்புவார். மற்ற விசுவாசிகளுடனான அவருடைய அன்பின் ஐக்கியத்தில் வளரச்செய்வார். இறைவனுடைய பிரசன்னம். அடிப்படைத்தன்மையை வெளிப்படுத்தும் ஆலயமாக இருக்கச் செய்வார். நீ இந்த ஆவிக்குரிய ஆலயத்தின் அழகு மற்றும் மகிமையை அனுபவிக்கின்றாயா? அதனுடைய குணாதிசயங்கள் அன்பு, தாழ்மை, மகிழ்ச்சி, பணிவு, சமாதானம், நேர்மை, சுயக்கட்டுப்பாடு மற்றும் எல்லா நீதியான செயல்களும் ஆகும். கிறிஸ்தவ விசுவாசத்தின் கனியினால் நீ அலங்கரிக்கப்பட்டிருக்கிறாயா? அசுத்த ஆவிகளினால் நிறைந்துள்ள உலகத்தின் மத்தியில் உனது நடத்தையின் மூலம் நீ இறைவனை மகிமைப்படுத்த வேண்டும்.

விண்ணப்பம்: உன்னதமான இறைவனே, நாங்கள் உமக்க நன்றி கூறுகிறோம். நீர் சபையில் ஆலயத்தில், அல்லது கற்களினால் கட்டப்பட்ட வீட்டில் வாழுவது இல்லை. நீர் கிறிஸ்துவை உண்மையாக விசுவாசிக்கும் அனைவருக்குள்ளும் நீர் வாசம் செய்கிறீர். எனது இருதயத்திற்குள் வாழும், எனது மனச்சாட்சியை தூய்மைப்படுத்தும். உமது பரிசுத்த ஆவியினால் என்னுடைய உள்ளத்தை நிரப்பும். எப்பொழுதும் நீரே என் வாழ்வின் மையமாய் இருப்பீராக. நான் நிலையான மகிழ்ச்சியுடன் உமக்கு கீழ்ப்படிய உதவும்.

கேள்வி:

  1. பொன்னால் செய்யப்பட்ட மகிமையுள்ள ஆலயத்தைவிட ஆசரிப்புக் கூடாரத்திற்கு ஸ்தேவான் ஏன் முன்னுரிமை கொடுத்தார்?

www.Waters-of-Life.net

Page last modified on July 02, 2013, at 09:43 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)