Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 130 (The witness of John and his gospel)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 4 - ஒளி இருளை மேற்கொள்ளுகிறது (யோவான் 18:1 – 21:25)
ஆ - கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் மற்றும் தரிசனமாகுதல் (யோவான் 20:1 - 21:25)
5. இயேசு ஏரியினருகே காட்சி தருகின்றார் (யோவான் 21:1-25)

ஈ) யோவானின் சாட்சி மற்றும் அவனுடைய நற்செய்தி (யோவான் 21:24-25)


யோவான் 21:24
24 அந்தச் சீஷனே இவைகளைக் குறித்துச் சாட்சிகொடுத்து இவைகளை எழுதினவன்; அவனுடைய சாட்சி மெய்யென்று அறிந்திருக்கிறோம்.

இங்கு நாம் நான்கு முக்கிய சத்தியங்களை கண்டு கொள்கிறோம்.

தனது நற்செய்தி வெளியிடப்பட்ட போது, நற்செய்தியாளர் உயிருடன் இருந்தார். கிரேக்கம் பேசும் சபைகள் நடுவில் நன்கு அறியப்பட்டவராக இருந்தார். திருமுழுக்கு யோவானின் நாட்களில் இருந்து கிறிஸ்துவின் பரமேறுதல் வரை யோவான் இயேசுவின் சீடராக தொடர்ந்து இருந்து வந்தான்.

இயேசு கிறிஸ்துவிற்கு கண் கண்ட சாட்சியாக யோவான் இருந்தான். அவன் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு. அவைகளை பதிவு செய்துள்ளான். மேலும் அவரது அடையாளங்களையும் பதிவு செய்துள்ளான். திருச்சபைகளின் ஒரு உறுப்பினர் இந்த நற்செய்தியை எழுதவில்லை. ஆனால் இயேசுவுக்கு அன்பாயிருந்த சீஷன் யோவான் இதை எழுதியுள்ளார்.

அவன் கிரேக்க புலமை வாய்ந்தவன் அல்ல, ஆகவே தன்னைப் பின்பற்றுபவர்களில் மொழியியலில் திறமை வாய்ந்த ஒருவனிடம் தனது சிந்தனை ஓட்டங்களைப் பகிர்ந்து கொண்டான். அர்த்தங்கள் இன்னும் தெளிவாகின, சத்தியங்கள் மாற்றப்படவில்லை. அந்த நற்செய்தியை சுற்றறிக்கையாக அனுப்பியவர்கள் யோவானின் சாட்சி முற்றிலும் நம்பத்தக்கது என்று ஒரே குரலில் ஏற்றுக்கொண்டார்கள். இந்த ஏற்றுக்கொள்ளப்படுதல் தேவையாய் இருந்தது. ஏனெனில் யோவானின் நற்செய்தி அதன் உள்ளடக்கத்தில் மற்ற மூன்று நற்செய்திகளில் இருந்து வேறுபட்டதாக இருந்தது. இந்த ஒப்பற்ற நற்செய்தி அன்பாயிருந்த சீஷன் மூலம் நமக்கு கிடைத்துள்ளதால் நாம் மகிழ்ச்சி அடைகிறோம். இது நமக்குக் கிடைத்துள்ள பொக்கிஷங்களில் ஒன்றாகும்.

இந்த நற்செய்தியை வெளியிட்டவர்கள் ஒரே கருத்துடன் கிறிஸ்துவின் மெய்தன்மையை தங்கள் வாழ்வுகளில் வெளிப்படுத்தினார்கள். அவருடைய நாமத்தின் மேல் விசுவாசம் உள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் இறைவனுடைய பிள்ளைகளாகும்படியான அதிகாரத்தை பெற்றார்கள். தீய ஆவிகளைப் பகுத்தறியும் படியாக பரிசுத்த ஆவியானவர் அவர்கள் மீது இறங்கினார், அவர்களில் வாழ்ந்தார், அவர்களைப் பெலப்படுத்தினார். அவர்கள் பொய்கள், மிகைப்படுத்தல்கள் இவற்றிலிருந்து உண்மையை வேறுபிரித்து அறிந்திருந்தார்கள். எல்லா சத்தியத்திற்குள்ளும் வழிநடத்தும்படி தேற்றரவாளனை அவர்கள் பெற்றிருந்தார்கள்.

யோவான் 21:25
25 இயேசு செய்த வேறு அநேக காரியங்களுமுண்டு; அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாதென்று எண்ணுகிறேன். ஆமென்.
'

நான்கு நற்செய்திகள் இருப்பதை சிலர் தடைகளாக பார்க்கிறார்கள். பவுலின் கடிதங்கள் இன்னொரு நற்செய்தி என்று அவர் கூறுவது போல நாம் இணைத்துக்கொண்டால். ஐந்து நற்செய்தி நூல்கள் என்றாகி விடுகிறது. ஒரு மெய் கிறிஸ்தவனின் வாழ்க்கை தன்னில்தானே ஒரு நற்செய்தியாக இருக்கிறது. சீஷர்களிடமிருந்து இயேசுவின் கூற்றுகள் மற்றும் செயல்களை கேட்டதாக நற்செய்தியாளர் யோவான் அறிக்கையிடுகிறார். இறைவனின் முழுமை அவருக்குள் வாசமாய் இருந்தது. இன்றும் அவர் தன்னுடைய திருச்சபையில் வாசம்பண்ணுகிறார். திருச்சபை அவருடைய அடிச்சுவடுகளில் நடக்கும்படி வழிநடத்துகிறார். இயேசு உயிர்த்தெழுந்தது முதல் இன்று வரை செய்யும் அனைத்து செயல்களையும் எழுத முற்பட்டால், எல்லா புத்தகங்களும் அந்த நோக்கங்களை நிறைவேற்ற போதுமானதாக இருக்காது. மனுக்குலத்தின் வரலாற்றில் செயல்படும் கிறிஸ்துவின் அன்பின் உயரம், அகலம், ஆழம் மற்றும் நீளத்தை புரிந்துகொள்ள கிறிஸ்தவர்களுக்கு நித்தியம் தேவை.

புதிய ஏற்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள தம்முடைய வார்த்தைகள் மூலம் நமது உயிருள்ள ஆண்டவர் செயல்படுகிறார். நாம் பாக்கியவான்களாக எண்ணப்படுகிறோம். ஏனெனில் நாம் அவர் சத்தம் கேட்கிறோம், அவருடைய எண்ணங்களை கிரகித்துக் கொள்கிறோம், அவருடைய அழைப்பைக் கேட்டு பின்பற்றுகிறோம். எல்லோரும் அறிக்கையிடும்படி யோவான் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் அன்பை குறிப்பிடுகிறார். “நாங்கள் அவருடைய மகிமையைக் கண்டோம். அது பிதாவின் ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருக்கிறது. அவர் கிருபையினாலும், சத்தியத்தினாலும் நிறைந்தவராய் இருக்கிறார். அவருடைய பரிபூரணத்தினால் நாம் அனைவரும் கிருபையின் மேல் கிருபை பெற்றிருக்கிறோம்.

விண்ணப்பம்: நாங்கள் உமக்கு நன்றி கூறுகிறோம். உமது அன்பின் நற்செய்தியை எழுதும்படி உமது தாசன் யோவானை நீர் தூண்டியதற்காக உமக்கு நன்றி. அவனுடைய வார்த்தைகள் மூலம் நீர் எங்களுடன் பேசுகிறீர். உமது இரக்கம், வார்த்தைகள், செயல்கள், வாழ்வு, மரணம் மற்றும் உயிர்த்தெழுதலுக்காக நாங்கள் நன்றி செலுத்துகிறோம். நீர் எங்களுக்கு பிதாவை வெளிப்படுத்தினீர். எங்கள் பாவங்களை மன்னித்தீர். உமது ஆவியானவர் மூலமாக எங்களுக்கு புதிய வாழ்வைக் கொடுத்துள்ளீர்.

கேள்வி:

  1. யோவான் நற்செய்தியை வெளியிட்டவர்களுக்கு என்ன சாட்சியாக அறிவிக்கப்படுகிறது?

கேள்விகள்- 7

அன்புள்ள வாசகரே: 24 கேள்விகளில் 20 கேள்விகளுக்கு சரியான பதிலை எழுதி எங்களுக்கு அனுப்புங்கள். இத்தொடரில் முன்பு உள்ள 6 சிறிய புத்தகங்களுக்கு நீங்கள் பதில் அனுப்பியிருப்பீர்கள் என்றால், நாங்கள் உங்களுக்கு ஒரு சான்றிதழ் அனுப்புவோம். இந்த யோவான் நற்செய்தியை ஆர்வமுடன் கற்றுக் கொண்டதற்கு பரிசாக அது இருக்கும்.

  1. அன்னா முன்பு இயேசு விசாரிக்கப்பட்ட போது, அவருக்கும், பேதுருவுக்கும் இடையே உள்ள உறவு எப்படி இருந்தது?
  2. எப்படி அல்லது எந்த விதத்தில் இயேசு இராஜாவாக இருக்கிறார்?
  3. அடிக்கப்பட்டு, செவ்வங்கி அணிந்து, முட்கிரீடம் சூட்டப்பட்டுள்ள இயேசுவைப் பற்றிய காட்சியிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
  4. இயேசுவின் மீதான தீர்ப்பை ஏன் பிலாத்து வழங்கினான்?
  5. சிலுவையின் மீது போடப்பட்ட தலைப்பின் அர்த்தம் என்ன?
  6. இயேசுவின் மூன்று வார்த்தைகள் என்ன?
  7. கிறிஸ்துவின் எலும்புகள் முறிக்கப்படவில்லை என்ற உண்மையிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
  8. இயேசுவின் அடக்கம்பண்ணப்படுதல் நமக்கு என்ன கற்றுக் கொடுக்கிறது?
  9. இயேசுவின் உயிர்த்தெழுதலைப் பற்றி மூன்று ஆதார உண்மைகள் என்ன?
  10. காலியான கல்லறையினுள் இருந்த போது யோவான் எதன் மீது நம்பிக்கை வைத்தார்?
  11. இயேசு மரியாளை பெயர் சொல்லி அழைத்து, தன்னை வெளிப்படுத்தும் வரைக்கும் ஏன் அவள் இயேசுவின் சரீரத்தை தேடுவதை நிறுத்தவில்லை?
  12. மகதலேனா மரியாள் மூலம் நமக்கு சொல்லப்படுகிற கிறிஸ்துவின் செய்தி என்ன?
  13. இயேசு உயிர்த்தெழுந்த பின்பு தமது சீஷர்களுக்கு சொன்ன முதல் வார்த்தையின் அர்த்தம் என்ன?
  14. ஏன் சீஷர்கள் மகிழ்ச்சியுடன் இருந்தார்கள்?
  15. சீஷர்களை அனுப்புவதில் வேறுபட்ட காரியமாக எது இருந்தது?
  16. பரிசுத்த ஆவியானவர் யார்? கிறிஸ்துவுக்காக நீங்கள் சாட்சியாய் இருக்கும் போது அவர் உங்கள் மூலம் என்ன செய்கிறார்?
  17. தோமாவின் அறிக்கை எதை வெளிப்படுத்துகிறது?
  18. தன்னைக் காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்களை பாக்கியவான்கள் என்று இயேசு ஏன் அழைத்தார்?
  19. யோவான் தன்னுடைய நற்செய்தியின் முடிவில் எதை விரிவுபடுத்தி கூறுகிறார்?
  20. நிறைய மீன்கள் பிடித்த செயலானது சீஷர்களுக்கு ஏன் வெட்கப்பட ஏதுவான ஒன்றாக இருந்தது?
  21. இயேசுவுக்கும், பேதுருவுக்கும் இடையே நடந்த உரையாடலில் உங்களைக் கவர்ந்தது என்ன?
  22. பேதுரு எவ்விதம் இறைவனை மகிமைப்படுத்தினார்?
  23. இந்த நற்செய்தியில் கூறப்பட்டுள்ள இயேசுவின் கடைசி வார்த்தைகள் என்ன?
  24. யோவான் நற்செய்தி தனது வாசகர்களுக்கு எதை வலியுறுத்திக் கூறுகிறது?

உங்கள் பெயர், முழு முகவரியை தெளிவான வெள்ளைத்தாளில் எழுத மறக்க வேண்டாம். உறையின் மேலும் எழுதுங்கள். கீழ்க்கானும் முகவரிக்கு அனுப்புங்கள்.

Waters of Life
P.O.Box 600 513
70305 Stuttgart
Germany

Internet: www.waters-of-life.net
Internet: www.waters-of-life.org
e-mail: info@waters-of-life.net

குறிப்பு: நீங்கள் எங்களுடன் இணைந்து தொடர்ந்து கற்றுக்கொள்ள விரும்பினால், நாங்கள் வேதாகமத்தின் மற்ற புத்தகங்களைக் குறித்த தியானங்கள் அடங்கிய புத்தகங்களின் வரிசையை உங்களுக்கு அனுப்ப ஆயத்தமாயிருக்கிறோம்.

www.Waters-of-Life.net

Page last modified on August 29, 2012, at 10:48 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)