Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 128 (Peter confirmed in the service of the flock)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 4 - ஒளி இருளை மேற்கொள்ளுகிறது (யோவான் 18:1 – 21:25)
ஆ - கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் மற்றும் தரிசனமாகுதல் (யோவான் 20:1 - 21:25)
5. இயேசு ஏரியினருகே காட்சி தருகின்றார் (யோவான் 21:1-25)

ஆ) மந்தையை மேய்க்கின்ற பணியில் பேதுரு உறுதிபடுத்தப்படுகிறார் (யோவான் 21:15-19)


யோவான் 21:18-19
18 நீ இளயவதுள்ளவனாயிருந்தபோது உன்னை நீயே அரைகட்டிக்கொண்டு, உனக்கு இஷ்டமான இடங்களிலே நடந்து திரிந்தாய்; நீ முதிர்வயதுள்ளவனாகும்போது உன் கைகளை நீட்டுவாய்; வேறொருவன் உன் அரையைக் கட்டி, உனக்கு இஷ்டமில்லாத இடத்துக்கு உன்னைக் கொண்டுபோவான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.19 இன்னவிதமான மரணத்தினாலே அவன் தேவனை மகிமைப்படுத்தப்போகிறானென்பதைக் குறிக்கும்படியாக இப்படிச் சொன்னார். அவர் இதைச் சொல்லியபின்பு, அவனை நோக்கி: என்னைப் பின்பற்றிவா என்றார்.

பேதுரு மற்றும் அவருடைய சீடர்களின் இதயம் வைராக்கியம் மற்றும் உணர்ச்சியினால் நிறைந்திருந்தது என்பதை இயேசு புரிந்து கொண்டார். முதலாவது கிறிஸ்துவின் மீது விசுவாசத்தைக் காண்பிக்கும் வாலிபர்களின் அனுபவத்தில் நாம் அடிக்கடி இப்படிப்பட்ட அக்கறையற்ற நிலையை காண்கிறோம். அவர்கள் பரிசுத்த ஆவியின் அனுபவத்தைப் பெற்ற போது, வெடித்துக் கிளம்பினார்கள், மற்றவர்களை இரட்சிக்க விரைந்தார்கள். அநேக சமயங்களில் அவர்கள் வெறும் மனித ஆர்வத்தை மட்டுமே வைத்து சேவை செய்கிறார்கள். இயேசுவின் வழி நடத்துதலின்படி செய்கிறதில்லை. அது நேர்மையானது, விண்ணப்பத்தால் நிறைந்தது, கூட்டுப்பணியாய் செயல்படுவது ஆகும்.

இருப்பினும் இயேசு பேதுருவைக் குறித்து தீர்க்கதரிசனம் உரைத்தார். அவன் சுய நம்பிக்கையை விட்டுவிடுவான். ஆவியில் முதிர்ச்சியடைவான். அவனுடைய ஆண்டவரிடம் சரணாகதி அடைவான். அன்புடன் செயல்படுவான். கிறிஸ்து விரும்புவதை மட்டுமே அவன் விரும்புவான்.

பேதுரு எருசலேமில் தங்கிவிட்டார். புறஜாதிகளிடம் அவர் செல்லவில்லை. அவர் அடிக்கப்பட்டார். பலமுறை சிறையில் தள்ளப்பட்டார். ஒரு முறை கர்த்தருடைய தூதனால் விடுவிக்கப்பட்டார். அவர் பரிசுத்த ஆவியினால் நடத்தப்பட்டு ரோம நூற்றுக்குஅதிபதி கொர்நேலியு வீட்டிற்கு சென்றார். அங்கு தான் அவர், சுத்தமற்ற மக்கள் என முன்பு கருதப்பட்ட மக்கள் மீதும் பரிசுத்த ஆவியானவர் இறங்குவதைப் பார்த்தார். நற்செய்தியின் இந்த படியில், அவர் உலகலாவிய அருட்பணிக்கு கதவை திறந்தார்.

ஏரோதுவின் சிறையிலிருந்து பேதுரு வெளியேறிய பின்பு, அவர் புதிதாக நிறுவப்பட்ட சபைகளுக்கு சென்றார். குறிப்பாக பவுல் சிறைச்சாலையில் தள்ளப்பட்ட போது இப்படிச் செய்தார். புற இனத்து மக்களில் இருந்த கிறிஸ்தவர்களான மக்களை முதன்மை அப்போஸ்தலர் சந்தித்து தகப்பனுக்குரிய செய்திகளைக் கூறி அவர்களை உற்சாகப்படுத்தினார். நீரோவின் துன்புறுத்தல் நிகழ்ந்த நேரம் ரோமில் பேதுருவின் மரணம் பற்றி பாரம்பரியம் கூறுகின்றது. ஆண்டவரைப் போல சிலுவையில் அறையப்படுவதற்கு நான் தகுதியற்றவன், தலைகீழாக என்னை சிலுவையில் அறையுங்கள் என்று பேதுரு அவர்களிடம் வேண்டிக்கொண்டான். இயேசு இதை முன்னுரைத்திருந்தார். பேதுரு இவ்விதமான மரணத்தினாலே தன்னை மகிமைப்படுத்துவான் என்று கூறினார். இதற்கு முன்பு பேதுரு இயேசுவிடம், ஆண்டவருக்காக தனது உயிரையும் கொடுக்க ஆயத்தம் என்று குறிப்பிட்டிருந்தார். இயேசு கூறினார். “நான் போகிற இடத்துக்கு இப்பொழுது நீ என் பின்னே வரக்கூடாது, பிற்பாடு என் பின்னே வருவாய்” (யோவான் 13:36) இயேசு தனது சொந்த வல்லமை மகிமை இவற்றோடு சீஷர்களை தன்னுடன் அடையாளப்படுத்திக் கொண்டார். அவருடன், பிதாவுடன், பரிசுத்த ஆவியானவருடன் இணைந்திருக்கும்படி செய்தார். அவர் தன்னுடைய பாடுகள், மரணத்தில் அவர்களை பங்காளிகளாக்கினார். இது மகிமையின் ஒரு முன்ருசி ஆகும். நற்செய்தியில் மகிமை என்பது புகழ்ச்சி, கனம் என்ற உலகப்பிரகாரமான அர்த்தத்தை கொடுக்கவில்லை. அது நம்மை நேசித்தவருக்காக பாடுபடுவது மற்றும் சிலுவை சுமப்பது ஆகும். பேதுரு தனது சொந்த முயற்சியால் இறைவனை மகிமைப்படுத்த முடியாது. ஆனால் கிறிஸ்துவின் இரத்தம் அவனை தூய்மைப்படுத்தியது. ஆவியானவரின் வல்லமை அவனை பரிசுத்தப்படுத்தியது. அவன் தன்னைத்தானே சுயமறுப்பு செய்யவும், ஆண்டவருக்காக வாழவும், மரித்து அவரை மகிமைப்படுத்தவும் ஆவியானவர் நடத்தினார்.

பிற்பாடு, கிறிஸ்து பேதுருவிற்கு இராணுவக் கட்டடையிட்டார் “என்னைப் பின்பற்றி வா” வாழ்விலும், மரணத்திலும் நாம் அவரை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். நாம் அன்பின் கனிகளை கொடுப்போம். இரக்கமுள்ள பிதாவின் நாமத்தை பரிசுத்தப்படுத்துவோம்.

விண்ணப்பம்: ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவே, பேதுருவை நீர் புறக்கணிக்காததற்காக நாங்கள் உமக்கு நன்றி கூறுகிறோம். அவன் உம்மை மறுதலித்தான். ஆனாலும் வாழ்விலும், மரணத்திலும் பரிசுத்த திரியேக இறைவனை மகிமைப்படுத்த நீர் அவனை அழைத்தீர். எங்கள் ஜீவனை எடுத்துக்கொள்ளும். உமது வழிநடத்துதலுக்கு முழுவதும் ஒப்புக்கொடுக்கும்படி எங்களது சித்தத்தை தூய்மைப்படுத்தும். முடிவுவரை உமது கட்டளைகளைக் கைக்கொள்ள, எதிரிகளை நேசிக்க, கீழ்ப்படிகிற விசுவாசத்துடன் உம்மை கனப்படுத்த உதவும். அப்போது எங்கள் வாழ்வு உமது கிருபையை போற்றுவதாக மாறும்.

கேள்வி:

  1. பேதுரு எவ்விதம் இறைவனை மகிமைப்படுத்தினார்?

www.Waters-of-Life.net

Page last modified on August 29, 2012, at 10:45 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)