Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 121 (Jesus appears to the disciples)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 4 - ஒளி இருளை மேற்கொள்ளுகிறது (யோவான் 18:1 – 21:25)
ஆ - கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் மற்றும் தரிசனமாகுதல் (யோவான் 20:1 - 21:25)

2. இயேசு மேலறையில் தமது சீஷர்களுக்கு காட்சியளிக்கிறார் (யோவான் 20:19-23)


யோவான் 20:21
21 இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: உங்களுக்குச் சமாதானமுண்டாவதாக; பிதா என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன் என்று சொல்லி.

இயேசு “சமாதானம் உண்டாவதாக” என்று திரும்பத் திரும்பக் கூறும்போது, அவருடைய மனதில் பாவத்திற்காக பலி செலுத்தப்பட்டதும், ஒப்புரவாகுதல் நிறைவேறியதும் காணப்பட்டது. சமாதானம் பண்ணுகிறவர்களாக சீஷர்கள் திகழ அவர் விரும்பினார். அப்போது முழு மனுக்குலத்திற்கும் இரட்சிப்பை வழங்க முடியும். சிலுவையில் இறைவன் மனிதர்களின் பாவங்களை மன்னித்தார். இந்த புதிய உண்மை பாவிகளுக்கான மன்னிப்பை உறுதிப்படுத்துகிறது: நியாயத்தீர்ப்பிலிருந்து விசுவாசிகள் பாதுகாக்கப்படும் வாக்குத்தத்தத்தை அளிக்கிறது. அழிவிலிருந்து சுதந்திரத்திற்கான நம்பிக்கை கிடைக்கிறது. இறைவனின் சமாதானத்தை பாவிகளுக்கு பிரசங்கிக்கும் படி இயேசு தம்முடைய சீஷர்களை இந்த உலகத்திற்குள் அனுப்பினார்.

இறைவனின் கிருபையால் மீட்கப்பட்டவர்கள் இதயத்தில் மாற்றம் பெற்றவர்கள் ஆவார்கள். அவர்கள் இறைவன் தங்களை மன்னித்ததைப் போல, அவர்களுடைய எதிரிகளை மன்னிப்பார்கள். அநியாயத்தை சகித்துக் கொள்வதை அவன் தெரிந்து கொள்வான். தானாகவே நீதியற்ற முறையில் அவன் நடக்க மாட்டான். அவன் இயேசு குறிப்பிட்டதைப் போல தன்னைச் சுற்றிலும் பரலோகத்தின் வாசனையை வீசிடும்படி செய்வான். “சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் இறைவனுடைய பிள்ளைகள் என்று அழைக்கப்படுவார்கள்.” நற்செய்தியில் நம்முடைய நோக்கம் சூழ்நிலைகளை மாற்றி அமைப்பதல்ல, அல்லது தேசங்களுக்கிடையே இயற்கைக்கு அப்பாற்பட்ட சமாதானத்தை கொண்டு வருவதுமல்ல, மாறாக நாம் வாழ்க்கைகள் மாற்றப்படும்படியாக விண்ணப்பம் பண்ணுகிறோம். கல்லான இருதயங்களை மென்மையான இருதயங்களாக மாற்றப்பட வேண்டும். அப்படிப்பட்ட மாற்றங்களினால் தான் அரசியல் மாற்றங்கள் நிகழும்.

இயேசு தம்முடைய சீஷர்களுக்கான பணியின் நிலையை தம்முடைய நிலைக்கு உயர்த்தினார். “என் பிதா என்னை அனுப்பினது போல நான் உங்களை அனுப்புகிறேன்” எப்படி பிதா தமது குமாரனை அனுப்பினார்? முதலாவது குமாரனாக அனுப்பினார். இரண்டாவதாக இறைவனின் பிதா என்ற தன்மையை அறிவிக்க வந்தார். விண்ணப்பத்தில் தமது வார்த்தை மற்றும் செயலால் பரிசுத்தத்தை வெளிப்படுத்தவும் வந்தார். மூன்றாவதாக இயேசு இறைவனின் வார்த்தையால் நிறைந்தவராக வந்தார். நித்திய அன்புடன் அது பொங்கி வழிந்தது. இந்தக் கொள்கைகளில் நாம் நற்செய்தியின் தன்மை மற்றும் நோக்கங்களைக் காண முடிகிறது. தமது மரணத்தின் மூலம் நாம் பரிசுத்த வாழ்வு நடத்தும்படி இயேசு நம்மை இறைவனுடைய பிள்ளைகளாக மாற்றியிருக்கிறார். அவரது அன்பில் அவருக்கு முன்பு குற்றமற்றவர்களாக இருப்போம். கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவின் தூதுவர்களாக இருக்கிறார்கள். அவர்களது பரலோகப் பிதாவின் அன்பையும், அவரது தன்மையையும் வெளிப்படுத்தும்படி இவர்கள் நீதிமானாக்கப்பட்டு, பரிசுத்தமாக்கப்பட்டுள்ளார்கள். இதுவே அவர்களது செய்தியின் உட்கருத்து ஆகும். பிதாவானவர் குமாரனின் மரணத்தின் மூலம் அவர்களை தன்னுடைய பிள்ளைகளாக மாற்றினார். சிலுவை என்பது அவர்களது புதிய நிலைக்கான நிபந்தனையாக உள்ளது. அவர்கள் புத்திரசுவிகாரம் அடையும்படியான வழியாக விசுவாசம் இருக்கிறது.

இயேசு பலியாக மரிக்கும்படி பிறந்தது போல, அவரைப் பின்பற்றுபவர்கள் பலியின் நோக்கத்தை நிறைவேற்றும்படி வாழ வேண்டும். அவர்கள் தற்புகழ்ச்சி செய்கிறதில்லை. உன்னதமானவரின் மற்றும் எல்லா மக்களின் பணியாளர்களாக அவர்கள் மதிக்கப்படுவார்கள். அவர்களது ஆண்டவர் அவர்களின் கீழான நிலையிலிருந்து அவர்களை விடுவித்துள்ளார். அவர் நேசித்தது போல இவர்களும் நேசிக்க வேண்டும்.

விண்ணப்பம்: கர்த்தராகிய இயேசுவே, உமக்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம். ஏனெனில் நீர் எங்களை அழைத்தீர். நாங்கள் தகுதியற்றவர்களாக இருந்தோம். எங்கள் சிந்தனைகள், வார்த்தைகள், செயல்கள் மூலம் உமது நாமத்தையும், பிதாவையும் மகிமைப்படுத்த உதவிசெய்யும். எங்கள் பாவங்களை மன்னித்ததற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். மற்ற இதயங்களுக்கு சமாதானத்தை கொண்டு போகும்படி நீர் எங்களை பரிசுத்தப்படுத்தும். அவர்கள் ஒளியூட்டப்பட்டு, உண்மையாக வாழ கிருபை செய்யும். கிறிஸ்துவே உமக்கு நன்றி, உமது அன்பின் பிள்ளைகளாக எங்களை மாற்றியுள்ளீர். நீர் உமது இரக்கத்தில் அன்பு செய்து மன்னித்தது போல நாங்களும் அன்பு செய்ய, மன்னிக்க உதவி செய்யும்.

கேள்வி:

  1. சீஷர்களை அனுப்புவதில் வேறுபட்ட காரியமாக எது இருந்தது?

www.Waters-of-Life.net

Page last modified on August 29, 2012, at 10:33 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)