Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 108 (The charge against Christ's royal claims)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 4 - ஒளி இருளை மேற்கொள்ளுகிறது (யோவான் 18:1 – 21:25)
அ - கைது முதல் அடக்கம்வரை நடந்த நிகழ்வுகள் (யோவான் 18:1 - 19:42)
3. ரோம ஆளுநர் முன்பு குடிமகனுக்குரிய விசாரனை (யோவான் 18:28 – 19:16)

அ) கிறிஸ்துவின் இராஜரீக உரிமை கோருதலுக்கு எதிரான குற்றச்சாட்டு (யோவான் 18:28-38)


யோவான் 18:28-32
28 அவர்கள் காய்பாவினிடத்திலிருந்து இயேசுவைத் தேசாதிபதியின் அரமனைக்குக் கொண்டுபோனார்கள்; அப்பொழுது விடியற்காலமாயிருந்தது. தீட்டுப்படாமல் பஸ்காவைப் புசிக்கத்தக்கதாக, அவர்கள் தேசாதிபதியின் அரமனைக்குள் பிரவேசியாதிருந்தார்கள்.29 ஆதலால் பிலாத்து அவர்களிடத்தில் வெளியே வந்து: இந்த மனுஷன்மேல் என்ன குற்றஞ்சாட்டுகிறீர்கள் என்றான்.30 அவர்கள் அவனுக்குப் பிரதியுத்தரமாக: இவன் குற்றவாளியாயிராவிட்டால், இவனை உம்மிடத்தில் ஒப்புக்கொடுக்கமாட்டோம் என்றார்கள்.31 அப்பொழுது பிலாத்து அவர்களை நோக்கி: இவனை நீங்களே கொண்டுபோய், உங்கள் நியாயப்பிரமாணத்தின்படி நியாயந்தீருங்கள் என்றான். அதற்கு யூதர்கள்: ஒருவனையும் மரண ஆக்கினை செய்ய எங்களுக்கு அதிகாரமில்லை என்றார்கள்.32 தாம் இன்னவிதமான மரணமாய் மரிக்கப்போகிறாரென்பதைக்குறித்து இயேசு குறிப்பாய்ச் சொல்லியிருந்த வார்த்தை நிறைவேறத்தக்கதாக இப்படிச் சொன்னார்கள்.

இயேசு பெதஸ்தாவில் முடக்குவாதமுள்ளவனை சுகமாக்கிய போது, சில யூதர்கள் அவரை வெகுசீக்கிரத்தில் கொல்ல நினைத்தார்கள்.(5:18) லாசரு உயிரோடெழுப்பப்பட்ட போது பெரும்பான்மையான யூதத் தலைவர்கள், அவர் கண்டிப்பாக மரணத்தை சந்திக்க வேண்டும் என்று இரகசியமாய் தீர்மானித்தார்கள். (11:46)

யோவானால் குறிப்பிடப்படாத இரண்டு முக்கியமான ஆலோசனைச் சங்கத்தின் கூடுகைகள் வியாழன் இரவு நடைபெற்றது. (மத் 26:57-67, 27:1) கிரேக்க வாசகர்களுக்கு இந்த யூத மார்க்க விளக்கங்கள் குறைந்த முக்கியத்துவம் உடையவை. எனவே தேவாலயத்தை பாதுகாக்கும் படைவீரர்களின் குடியிருப்பில் ரோம நீதியின் பிரதிநிதியாக விளங்கிய பிலாத்து அறிவித்த அநீதியான தீர்ப்பை யோவான் வலியுறுத்திக் காண்பிக்கிறார். பிலாத்து மாத்திரமே தண்டிக்கவும், விடுதலை செய்யவும் அதிகாரம் உடையவனாய் இருந்தான்.

புற இனத்தைக் சேர்ந்த பிலாத்துவின் அரண்மனையில் பிரவேசித்து, தீட்டுப்படலாகாது என்று யூதர்கள் எண்ணினார்கள். தங்கள் குடும்பத்தினருடன் பஸ்காவை ஆசரிக்க வந்தவர்கள் பரிசுத்தத்தை காக்க விரும்பினார்கள். இருப்பினும் அவர்கள் உண்மையான தேவ ஆட்டுக்குட்டியை அடித்துக் கொன்றார்கள். இயேசு சிறைப்பிடிக்கப்பட்ட இந்த முக்கிய தருணத்தில், பிலாத்துவின் வாழ்க்கையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. கலகம் ஒன்றை திட்டம் பண்ணியதற்காக, இவரைப் போன்ற ஒரு ரோம தேசாதிபதி சீஷர் என்ற ரோம மன்னனால் பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்தார். இந்த ரோம தேசாதிபதி ஓர் யூத எதிர்ப்பாளர். இவரின் இரகசிய சூழ்ச்சி யூதர்கள் மூலமாக வெளிப்படுத்தப்பட்டது. முன்பு யூதர்களை இகழ்ச்சியுடனும், கடினமாகவும் பிலாத்து நடத்தினான். ஆனால் தற்போது அவனின் அதிகாரம் வலிமையிழந்து காணப்பட்டது. யூதர்கள் இயேசுவை பிலாத்துவினிடத்தில் கொண்டு வந்த போது, தேசாதிபதி அவர்களின் குற்றச்சாட்டுகளை விசாரிக்க, எழுந்து அரண்மனைக்கு வெளியே போனார். அவர் விசாரிக்க அதிக நேரம் செலவழிக்கவில்லை. ஆனால் அவர்களின் குற்றச்சாட்டின் சாராம்சத்தை புரிந்து கொண்டார். புயபலம், படைபலம் இல்லாத ஒரு மன்னன், ரோமிற்கு ஆபத்தைக் கொண்டுவராத அவரது எருசலேம் கழுதைப் பவனி இவற்றை அறிந்து பிலாத்து தனது நமட்டுச் சிரிப்பு மூலம் இயேசுவைக் குறித்த மனப்பான்மையை வெளிப்படுத்தினார். மேலும் யூதர்களின் கோரிக்கைகளுக்கு அவன் சம்மதித்து, அவர்களின் விருப்பத்திற்கு ஒப்புக் கொடுத்தான். ஏற்கெனவே இயேசுவை சிறைபிடிக்க அனுப்பப்பட்ட படைக்கென்று ஓர் அதிகாரியை அவன் நியமித்திருந்தான். திட்டம் நிறைவேற்றப்பட்டது. இப்போது கைதி தீர்ப்பை எதிர் நோக்கி நிற்கிறார். பிலாத்து கேட்கிறான் “இவன் என்ன குற்றம் செய்தான்?”.

“இவனைக் குறித்து நாங்கள் முன்பே சொன்னவற்றை நீர் அறிந்திருக்கிறீர்” என்று யூத மூப்பர்கள் மறைமுகமாக அறிவித்தார்கள். இந்த மனிதன் கலகமுண்டாக்கும் நோக்கங்களை உடைய அரசியல் குற்றவாளி. நாங்கள் எதையும் இதனுடன் சேர்க்கத் தேவையில்லை. யூத மக்களின் எண்ணங்களை வெளிப்படுத்தும் வெறும் சட்டரீதியான சந்திப்பிற்காக நாங்கள் வரவில்லை. அவருடைய மரணத்தை உறுதிசெய்யும்படி வந்திருக்கிறோம். அப்போது தான் மக்கள் கொந்தளிப்பு அடையாமல் இருப்பார்கள்.

யூதர்களின் தவறான கருத்துகள் மற்றும் எண்ணங்களை பிலாத்து அறிந்திருந்தான். வல்லமைமிக்க மேசியாவைக் குறித்த அவர்களது எதிர்பார்ப்பையும், அவர்களது சட்டத்தைக் கொண்டு என்ன செய்ய முடியும் என்பதையும் அறிந்திருந்தான். ரோமச் சட்டத்தின்படி இயேசு குற்றத்திற்கு ஏதுவான ஒன்றையும் பேசவில்லை, செய்யவில்லை. ஆகவே அவன் இயேசுவை அவர்களது சட்டத்தின் படி தீர்ப்பு செய்யும்படி வெளியே கொண்டு வந்தான்.

நியாயப் பிரமாணத்தை மீறுபவர்களை கல்லெறிந்து கொல்லும் உரிமையை யூதர்கள் அந்நேரத்தில் பெற்றிருக்கவில்லை. இயேசுவை சிறுமைப்படுத்தும் நோக்குடன் செயல்பட்டார்கள். சுத்தமற்றவர்கள் என்று கருதப்பட்ட ரோமர்களின் கையில் பொதுவான விசாரனைக்கு இயேசுவை உட்படுத்தினார்கள். அப்போது தான் அடிமைகள் மற்றும் குற்றவாளிக்கு கிடைக்கும் கடுமையான தண்டனை இயேசுவுக்கு கிடைக்கும். சபிக்கப்பட்ட மரத்தின் மீது அவர் உயர்த்தப்பட முடியும். இயேசு தேவனுடைய குமாரன், வல்லமைமிக்கவர். நீதியுள்ளவர் அல்ல என்பதை இதன் மூலம் வெளிப்படுத்தமுடியும். மாறாக அவர் பலவீனமுள்ளவர், தேவதூஷனம் செய்பவர் என்பது வெளிப்படும். ரோமர்களின் கையில் இயேசு சிலுவையில் மரிப்பது, அவர் மேசியா அல்ல என்பதை நிரூபிக்கும் என்று காய்பா கருதினார். அதன் மூலம் அவர் சட்டத்திற்கு புறம்பாக அதிகாரத்தை அடைந்தவர் மற்றும் ஏமாற்றுக்காரர் என்பது வெளிப்படும் என்று கருதினார்

யோவான் 18:33-36
33 அப்பொழுது பிலாத்து மறுபடியும் அரமனைக்குள் பிரவேசித்து, இயேசுவை அழைத்து: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான்.34 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நீராய் இப்படிச் சொல்லுகிறீரோ? அல்லது மற்றவர்கள் என்னைக்குறித்து இப்படி உமக்குச் சொன்னார்களோ என்றார்.35 பிலாத்து பிரதியுத்தரமாக: நான் யூதனா? உன் ஜனங்களும் பிரதான ஆசாரியரும் உன்னை என்னிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள், நீ என்ன செய்தாய் என்றான்.36 இயேசு பிரதியுத்தரமாக: என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல என்றார்.

போர்வீரர்கள் இயேசுவை தங்கள் பகுதிக்கு கொண்டு சென்றார்கள். யூதர்களின் குற்றச்சாட்டை கேட்ட பிலாத்து, இயேசு தனது வாயினால் கூறும் எதிர்வாதங்களை கேட்க விரும்பினான். யூதர்களின் வார்த்தைகள் அனைத்தையும் பிலாத்து நம்பவில்லை. சட்டபூர்வ விசாரணையைத் தொடர அவன் கிறிஸ்துவிடம் கேட்டான், “நீ யூதருடைய ராஜாவா?” கறுப்புத் தாடி, பயமுறுத்தும் கண்களுடன் பற்களை கடித்துக் கொண்டிருக்கும் மேசியாக்களை நான் பார்த்திருக்கிறேன். நீ போராளியுமல்ல, தீவிரவாதியுமல்ல, நீ மிகவும் பரிதாபமிக்கவனாக, தாழ்மை மற்றும் எளிமையுடன் காணப்படுகிறாய். இராஜ பதவியை நீ எப்படி அடைய முடியும்? ஒரு ராஜாவுக்கு அதிகாரம், வல்லமை, இரக்கமற்ற தன்மை தேவை.

தான் ராஜா என்று உரிமை கோரியதை பிலாத்து சந்தேகித்தான் என்பதை இயேசு உணர்ந்து அவனிடம் கேட்டார். “என்னுடைய சீஷர்கள் இரவில் உனது படைவீரர்களுடன் சண்டையிட்டார்கள் என்று உமக்குச் சொன்னார்களா? உமது உளவாளிகள் என்னுடைய அரசியல் உரைகளை கேட்டார்களா? அல்லது யூதர்களின் பொய்யை மட்டுமே சார்ந்து உமது கேள்வி உள்ளதா? ஒரு ஆளுநர் தவறான குற்றச் சாட்டுகளுக்கு செவி சாய்க்க கூடாது.

பிலாத்து கோபத்துடன் பதிலளித்தான், “நான் ஒரு யூதனா?” பிடிவாதமான மதவெறி பிடித்த நிலைக்கு நான் இறங்கி வர அவசியமில்லை, மதத்தை குறித்த காரியங்களை இரவும், பகலும் விவாதிக்கத் தேவையில்லை”.

ஆகவே இயேசுவை தான் சிறைபிடிக்கவில்லை என்பதை பிலாத்து ஒத்துக்கொண்டான். யூதமக்களும், அவர்களது தலைவர்களும் தேசியவாதிகளும் தான் அதைச் செய்தார்கள். பின்பு பிலாத்து கேட்டான்,”நீ என்ன செய்தாய்? உன் மீது குற்றம் சாட்டுபவர்களுக்கு நான் பதில் சொல்லியாக வேண்டும். பேசு அல்லது நீ அடிக்கப்படுவாய்; முழு உண்மையையும் சொல்லு” இத் தருணத்தில் இயேசு சீஷர்களுடன் உரைத்தது போல முழு உண்மையையும் அறிக்கை செய்தார். அவர் சொன்னார், “இறைவனுடைய ராஜ்யம் எனக்குரியது. மற்றவர்களை அழித்து, ஆயுதத்தைப் பயன்படுத்தி, கலகத்தைத் தூண்டி கட்டப்பட்ட ராஜ்யம் அல்ல அது. கிறிஸ்துவின் ராஜ்யம் மற்றவர்களுடையதைப் போன்றது அல்ல. ஆயுதத்தை வைத்து போராட வேண்டாம், எறிகுண்டுகளை அல்லது வெடி குண்டுகளை பயன்படுத்தவேண்டாம் என்று இயேசு தன்னைப் பின்பற்றுபவர்களுக்கு கற்றுக்கொடுத்தார். பூமியின் அனைத்து ராஜ்யங்களை விட அவருடைய ராஜ்யம் முற்றிலும் வேறுபட்டது.

யோவான் 18:37-38
37 அப்பொழுது பிலாத்து அவரை நோக்கி: அப்படியானால் நீ ராஜாவோ என்றான். இயேசு பிரதியுத்தரமாக: நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான்; சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்றார்.38 அதற்குப் பிலாத்து: சத்தியமாவது என்ன என்றான். மறுபடியும் அவன் யூதர்களிடத்தில் வெளியே வந்து: நான் அவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன்.

பிலாத்து இயேசுவின் கூற்றின் தன்மையை கிரகித்துக் கொள்ள முடியவில்லை. ஆனால் இராஜா என்பதற்குரிய காரியங்களை தெளிவுபடுத்தாமல் தான் ராஜா என்று குற்றம் சாட்டப்பட்டவர் அறிக்கையிடுவதை அவன் உணர்ந்து கொண்டான். இயேசு இவ்வாறு பதிலளித்தார். “ நீர் எனது இரகசியத்தை உணர்ந்துள்ளீர், எனது வார்த்தைகளை புரிந்துகொண்டுள்ளீர். ஒரு ராஜா என்பவர் தனது ராஜ்யத்தின் சொந்தக்காரர் மற்றும் ஆளுகிறவர். எனது ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல; பொய்கள் மற்றும் ஏமாற்றுகளினால் கட்டப்படும் இவ்வுலக ராஜ்யத்தை போல எனது ராஜ்யம் இல்லை. ஏனெனில் நான் சத்தியத்தின் ராஜாவாக இருக்கிறேன்.

தனது ஆரம்பம் கன்னி மரியின் வயிற்றில் பிறந்தது முதல் அல்ல என்பதை இயேசு சாட்சியிட்டார். அதற்கும் அப்பாற்பட்ட நிலையில் இருந்து அவர் இந்த உலகிற்கு வந்தார். காலங்கள் தோன்றுமுன்னே அவர் பிதாவின் ஒரே பேறான குமாரனாக இருந்தார். அவர் தெய்வீக சத்தியங்களை அறிந்திருக்கிறார். இறைவனுடைய சத்தியத்திற்கு இயேசு சாட்சி கொடுக்கிறார். நித்திய குமாரனாக இருக்கிறார். அவர் உண்மையுள்ள சாட்சியாக இருக்கிறார். ஆனால் பிலாத்து சிரித்துக் கொண்டே கேட்டான், “சத்தியமாவது என்ன?” ஆளுநர் முழுவதும் மாய்மாலம் மற்றும் நம்பிக்கைத் துரோகம் செய்பவர் என்பது வெளிப்பட்டது. அவர் சத்தியத்தில் தனது நம்பிக்கையை இழந்து காணப்பட்டார். ஆனால் இயேசு தெய்வீக சத்தியங்களுக்காக உண்மையுள்ள சாட்சியாக உறுதியுடன் நின்றார். அவர் நமக்கு அவருடைய பிதாவின் நாமத்தை வெளிப்படுத்துகிறார்.

விண்ணப்பம்: ஆண்டவராகிய இயேசுவே, நீர் எனது ராஜா; நான் உம்மைச் சேர்ந்தவன். உமது இரக்கத்திற்கு என்னை அடிமையாக்கும். உமது சத்தியத்தில் என்னை உறுதியாக பிடித்துக் கொள்ளும்.

கேள்வி:

  1. எப்படி இயேசு ராஜாவாக இருக்கிறார்? மற்றும் ஏன் அவர் இராஜாவாக இருக்கிறார்?

www.Waters-of-Life.net

Page last modified on August 29, 2012, at 10:12 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)