Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 069 (The Son of God in the Father and the Father in him)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது (யோவான் 5:1 - 11:54)
இ - எருசலேமை நோக்கிய இயேசுவின் இறுதிப் பயணம் (யோவான் 7:1 - 11:54) கருத்து: இருளையும் ஒளியையும் பிரித்தல்
3. நல்ல மேய்ப்பன் இயேசு (யோவான் 10:1–39)

உ) இறைமகனில் பிதா, பிதாவில் இறைமகன் (யோவான் 10:31-36)


யோவான் 10:31-36
31 அப்பொழுது யூதர்கள் மறுபடியும் அவர்மேல் கல்லெறியும்படி, கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள். 32 இயேசு அவர்களை நோக்கி: நான் என் பிதாவினாலே அநேக நற்கிரியைகளை உங்களுக்குக் காண்பித்தேன், அவைகளில் எந்தக் கிரியையினிமித்தம் என்மேல் கல்லெறிகிறீர்கள் என்றார். 33 யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நற்கிரியையினிமித்தம் நாங்கள் உன்மேல் கல்லெறிகிறதில்லை; நீ மனுஷனாயிருக்க, உன்னை தேவன் என்று சொல்லி, இவ்விதமாக தேவதூஷணஞ்சொல்லுகிறபடியினால் உன்மேல் கல்லெறிகிறோம் என்றார்கள். 34 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவர்களாயிருக்கிறீர்கள் என்று நான் சொன்னேன் என்பதாய் உங்கள் வேதத்தில் எழுதியிருக்கவில்லையா? 35 தேவவசனத்தைப் பெற்றுக்கொண்டவர்களை தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேதவாக்கியமும் தவறாததாயிருக்க, 36 பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும், உலகத்தில் அனுப்பப்பட்டும் இருக்கிற நான் என்னை தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ்சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா?

“நானும் என் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்” என்று இயேசு சொன்னதைக் கேட்ட யூதர்கள் அவரை வெறுத்தார்கள். அவர் தன்னைக் குறித்து கொடுத்த சாட்சி அவர்களுக்குத் தேவதூஷணமாகத் தெரிந்தது. அதற்காக அவரைக் கல்லெறியும்படி முயற்சித்தார்கள். அல்லது யெகோவா இறைவனுடைய கோபம் தங்கள் இனத்தின் மீது பற்றியெரியும் என்று அவர்கள் நம்பினார்கள். ஆகவே அவர்கள் தேவாலயத்தின் வெளிப்பிரகாரத்திற்கு ஓடிவந்து அவர்மேல் எறியும்படி கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள்.

இயேசு அமைதியாக நின்று அவர்களைப் பார்த்துக் கேள்விகளைக் கேட்டார். “நான் உங்களுக்குச் செய்த தீமை என்ன? நான் உங்களுக்கு ஊழியம் செய்து, பிணியாளிகளைக் குணமாக்கி, குருடருடைய கண்களைத் திறந்தேன். குஷ்டரோகிகளைச் சுகமாக்கி ஏழைமக்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கித்தேன். இவற்றில் எந்தச் செயலுக்காக நீங்கள் என்மீது கல்லெறியப்பார்க்கிறீர்கள்? உங்களுக்கு நன்மை செய்பவரையே நீங்கள் அழிக்கப்பார்க்கிறீர்கள். நான் செய்த ஊழியத்திற்காக உங்களிடம் பணத்தையோ, மதிப்பையோ எதிர்பார்க்கவில்லை. நான் தாழ்மையுடன் அச்செயல்கள் என் பிதாவினுடையவைகள் என்று சொன்னேன். நான் உங்கள் ஊழியக்காரனாக இங்கு நிற்கிறேன்.”

“நீ செய்த அற்புதங்களுக்காக அல்ல, உன்னுடைய தேவதூஷணத்திற்காகவே நாங்கள் உன்மேல் கல்லெறிகிறோம். நீ எங்கள் நடுவில் ஒரு சாதாரண மனிதனாக நின்றுகொண்டு, உன்னை இறைவனுடைய நிலைக்கு உயர்த்தகிறாய். நீ அழியக்கூடிய மனிதன்தான் என்பதைக் காட்டும்படிக்கு நாங்கள் இப்போது உன்னுடைய இரத்தத்தைச் சிந்தப் போகிறோம். நானும் இறைவனும் ஒன்று என்று நீ எப்படிச் சொல்லாம்? நீ பிசாசு பிடித்தவனாயிருப்பதால் உடனடியாகக் கொல்லப்பட வேண்டியவன்” என்று யூதர்கள் அவர் மீது பாய்ந்தார்கள்.

இயேசு முழு நம்பிக்கையுடன் அவர்களுக்குப் பதில் சொன்னார். “நீங்கள் தேவர்கள் என்றும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன் (சங்கீதம் 82:6) என்பதாக நீங்கள் உங்கள் நியாயப்பிரமாணத்தில் வாசிக்கிறதில்லையா? நீங்கள் அழிந்துபோகிறவர்களாகவும் பாவங்களில் விழுகிறவர்களாகவும் இருக்கிறீர்கள். அனைவருமே பாவிகள் என்பதில் சந்தேகம் இல்லை. அப்படிப்பட்டவர்களை இறைவன் தன்னுடைய தெய்வீக நாமத்தினிமித்தம் அவர்களை “தேவர்கள் என்றும் தேவமக்கள்” என்று அழைத்திருக்கிறார். நீங்கள் அழிவதை அல்ல என்றும் வாழ்வதையே அவர் விரும்புகிறார். நீங்கள் இறைவனிடம் திரும்பி அவர் பரிசுத்தராயிருப்பதைப் போல நீங்களும் பரிசுத்தராயிருங்கள்.”

“நீங்கள் ஏன் என்னைக் கல்லெறிய வேண்டும்? இறைவனே “தேவர்கள் என்றும் பிள்ளைகள்” என்றும் தம்மக்களை அழைக்கிறாரே. நான் உங்களைப் போல பாவம் எதையும் செய்யவில்லையே. நான் என்னுடைய வாழ்க்கையிலும் வார்த்தையிலும் பரிசுத்தமாயிருக்கிறேன். மெய்யான இறைமகனாக என்றும் வாழும் உரிமை எனக்கிருக்கிறது. நீங்கள் உங்கள் நியாயப்பிரமாணத்தை வாசித்துப் பாருங்கள். அப்பொழுது என்னைப் பற்றி தெரிந்துகொள்வீர்கள். நீங்கள் உங்கள் வேதவாக்கியங்களையே நம்பாதபடியால் என்னுடைய தெய்வீகத்தை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.”

“நான் என்னுடைய சுய விருப்பத்தின்படி வரவில்லை. என்னுடைய பரிசுத்த பிதாவே என்னை அனுப்பினார். நான் அவருடைய குமாரன். அவர் என்னுடைய பிதா. அவருடைய பரிசுத்தம் என்னில் தங்கியிருக்கிறது. ஆகவே, நான் இறைவனில் இறைவனாகவும், ஒளியிலிருந்து வரும் ஒளியாகவும், படைக்கப்படாமல் பெற்றெடுக்கப்பட்டவராகவும், பிதாவின் அதே தன்மையுடயவராகவும் இருக்கிறேன்.”

இயேசு அவர்களுடைய வேதாகமத்திலிருந்தே பகுதிகளை எடுத்துக் காண்பித்து, அவர்களுடைய வாதங்களை முறியடித்தார். அவர்களுடைய கண்களில் வெறுப்பு இன்னும் கனன்றுகொண்டிருந்தாலும், இயேசு அவர்களுடைய வேதாகமத்திலிருந்து தெய்வீக குமாரத்துவத்தைக் குறித்து நிரூபித்துக் காட்டியதால் ஓங்கிய கரங்களை இறக்கிக்கினார்கள்.

யோவான் 10:37-39
37 என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்கவேண்டியதில்லை. 38 செய்தேனேயானால், நீங்கள் என்னை விசுவாசியாதிருந்தாலும், பிதா என்னிலும் நான் அவரிலும் இருக்கிறதை நீங்கள் அறிந்து விசுவாசிக்கும்படி அந்தக் கிரியைகளை விசுவாசியுங்கள் என்றார். 39 இதினிமித்தம் அவர்கள் மறுபடியும் அவரைப் பிடிக்கத் தேடினார்கள், அவரோ அவர்கள் கைக்குத் தப்பி,

இயேசு தொடர்ந்து அவர்களுக்கு விளக்கிக் கூறினார். “இறைவனைப் போல நானும் இரக்கத்தின் செயல்களைச் செய்வதால் நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டும். நான் இரக்கத்தின் செயல்களைச் செய்யாதபட்சத்தில் எனக்கு பிதாவின் அதிகாரம் இருக்காது. நான் அன்பின் மறுவுரவாதலாயிருக்கிற காரணத்தினால் இறைவனுடைய செயல்களைச் செய்யும் அதிகாரம் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவை உண்மையில் பிதாவின் கிரியைகளே.”

“மனிதத் தன்மையில் தெய்வீகத்தைப் புரிந்துகொள்ள ஒருவேளை உங்களால் முடியாமல் இருக்கலாம். ஆயினும் என்னுடைய அற்புதமான செயல்களைப் பாருங்கள். மரித்தவர்களை யார் வார்த்தையினால் உயிருடன் எழுப்ப முடியும்? யாரால் பிறவிக் குருடனுடைய கண்களைத் திறக்கவும், ஐந்து அப்பங்கள் இரண்டு மீன்களைக் கொண்டு ஐயாயிரம் பேருக்கு உணவளிக்க முடியும்? இறைவன் என்னில் இருக்கிறார் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளும்படி பரிசுத்த ஆவியானவர் உங்கள் கண்களைத் திறக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? நீங்கள் பரிசுத்த ஆவியினால் நிறைந்தால் மட்டுமே, என்னைப் பற்றிய அடிப்படையான அறிவை நீங்கள் பெற்று, தெய்வத்துவம் சரீரப்பிரகாரமாக என்னில் வாசமாயிருக்கிறது என்பதை அறிந்துகொள்வீர்கள்.”

அவரைக் கொல்லவந்த இந்தக் கூட்டத்தைப் பார்த்து இயேசு இந்த வல்லமையான வார்த்தைகளைக் கூறினார். கொடியானது செடியில் நிலைத்திருந்து தனக்கு வேண்டிய சத்தை செடியிலிருந்து பெற்றுக்கொள்வதைப் போல கிறிஸ்துவும் பிதாவிலிருந்து புறப்பட்டு வந்து அவரில் நிலைத்திருக்கிறார். அவர்கள் இருவரும் பிரிக்க முடியாதபடி ஒருவருடன் ஒருவர் இரண்டறக் கலந்திருக்கிறார்கள். பிதாவை வெளிப்படுத்தி அவரைக் கனப்படுத்தும்படி குமாரன் பிதாவில் மறைந்திருக்கிறார் என்று நாம் சொல்லலாம். அதனால்தான் இயேசு கற்பித்த ஜெபம், “பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே உம்முடைய நாமம் மகிமைப்படுவதாக” என்ற ஆரம்பிக்கிறது.

தன்னுடைய தெய்வீகத்தைக் குறித்த இயேசுவின் சாட்சியை ஆழ்ந்து சிந்திக்கும் எவரும் பரிசுத்த திரித்துவத்திற்கு அது ஆதாரமாயிருக்கிறது என்பதை உணர்ந்துகொள்வர். பரிசுத்த திரித்துவம் என்பது மூன்று தனித்தனி தெய்வங்கள் அல்ல, மூவரும் ஒன்றாயிருக்கும் பிரிக்க முடியாத ஒருமை. ஆகவே மிகுந்த மகிழ்ச்சியுடன் இறைவன் ஒருவரே என்பதற்கு நாங்கள் சாட்சிபகருகிறோம்.

இயேசு தனக்கும் பிதாவுக்கும் இருக்கின்ற பிரிக்க முடியாத ஒருமையைப் பற்றி மீண்டும் மீண்டும் சாட்சியிடுவதைப் பார்த்து அவரைக் கல்லெறிவதிலிருந்து பின்வாங்கினார்கள். ஆயினும் அவர்களை அவரைக் கைதுசெய்து ஆலோசனைச் சங்கத்திற்கு அழைத்துச் சென்று அவருடைய கருத்துக்களை ஆராய விரும்பினார்கள். இயேசு அவர்கள் நடுவிலிருந்து தப்பிச் சென்றார். பிதாவின் சித்தம் இறைவனுடைய மக்களைக் காக்கும்போது அவர்களை யாரும் தாக்க முடியாது. “அவர்களை ஒருவரும் என் பிதாவின் கரத்திலிருந்து பறிக்க முடியாது” என்று இயேசு சொன்னார்.

விண்ணப்பம்: பிதாவே, தேவ ஆட்டுக்குட்டியே, உங்கள் அன்பில் பரிபூரண ஒருமை இருப்பதை நாங்கள் காண்கிறோம். உம்முடைய மனிதத் தன்மையிலுள்ள தெய்வீகத் தன்மையை எங்கள் சிந்தையினால் புரிந்துகொள்ள முடியாது. உம்முடைய பரிசுத்த ஆவியானவர் எங்கள் மனதில் ஒளியூட்டி, உம்முடைய மாபெரும் அன்பையும் இரட்சிப்பின் செயல்களையும் உணரச் செய்துள்ளது. நீர் எங்களை உம்முடைய பிள்ளைகளாக்கினீர். எங்களுடைய சிந்தையிலும் வார்த்தையிலும் செயல்களிலும் உம்முடைய நாமத்தைப் பரிசுத்தப்படுத்த எங்களுக்க உதவி செய்யும். உம்மைப் போல் எங்களையும் நீர் பரிசுத்தப்படுத்தும்.

கேள்வி:

  1. இயேசு தன்னுடைய தெய்வீகத்தை எவ்வாறு அறிவிக்கிறார்?

www.Waters-of-Life.net

Page last modified on August 02, 2012, at 08:32 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)