Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 056 (Jesus the light of the world)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது (யோவான் 5:1 - 11:54)
இ - எருசலேமை நோக்கிய இயேசுவின் இறுதிப் பயணம் (யோவான் 7:1 - 11:54) கருத்து: இருளையும் ஒளியையும் பிரித்தல்
1. கூடாரப்பண்டிகையின்போது இயேசு கூறியவைகள் (யோவான் 7:1 – 8:59)

ஈ) உலகின் ஒளியாகிய இயேசு (யோவான் 8:12-29)


யோவான் 8:21-22
21 இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: நான் போகிறேன், நீங்கள் என்னைத் தேடி உங்கள் பாவங்களிலே சாவீர்கள்; நான் போகிற இடத்துக்கு வர உங்களால் கூடாது என்றார். 22 அப்பொழுது யூதர்கள்: நான் போகிற இடத்துக்கு வர உங்களால் கூடாது என்கிறானே, தன்னைத்தான் கொலை செய்துகொள்வானோ என்று பேசிக்கொண்டார்கள்.

இயேசு தான் எல்லாப் பக்கத்திலும் தேவாலயச் சேவகர்களினால் சூழப்பட்டிருப்பதை அறிந்திருந்தார். எதிர்காலத்தின் காரியங்களை அவர் இரகசியமான வார்த்தைகளில் எடுத்துரைத்தார். “என்னுடைய மரண நேரம் நெருங்கிவிட்டது. அப்போது நான் இவ்வுலகத்தைவிட்டுச் செல்வேன், நீங்கள் என்னைப் பின்தொடர்ந்து வர முடியாது. உங்களுடைய திட்டப்படி நீங்கள் அல்ல என்னைக் கொலை செய்பவர்கள். நான் செல்வதற்கான நேரத்தை நானே முடிவு செய்கிறேன்.”

“நான் கல்லறையை விட்டு எழுந்து பாறையையும் பூட்டப்பட்ட கதவுகளையும் ஊடுருவிச் செல்வேன். அப்போது என்னை தேடியும் கண்டுபிடிக்க மாட்டீர்கள். நான் என்னுடைய பிதாவினிடத்திற்கு ஏறிச் செல்வேன், அதை நீங்கள் அறிய மாட்டீர்கள். தேவஆட்டுக்குட்டியாகிய என்னை நீங்கள் புறக்கணித்து, மனுக்குலத்தின் மீட்பராகிய என்னை நீங்கள் நம்பவில்லை. நீங்கள் உங்கள் பாவச் சிறையில் சாவீர்கள். “உங்கள் பாவங்களில் நீங்கள் சாவீர்கள்” என்று இயேசு கூறவில்லை. சமுதாயத்தில் காணப்படும் அதிகமான பாவங்கள் நம்முடைய ஆதிப் பாவத்தை உருவாக்குவதில்லை. மாறாக இறைவனைக் குறித்த நம்முடைய மனநிலை, அதாவது அவர் மீது நாம் கொள்ளும் அவிசுவாசமே நம்முடைய பாவமாகும்.

இயேசு தன்னுடைய இறுதிப் புறப்பாட்டைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார் என்பதை யூதர்கள் புரிந்துகொண்டார்கள். ஆனால் அவர் தன்னுடைய பிதாவினிடத்தில் செல்கிறேன் என்று சொன்னதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. பரிசேயருடனும் ஆசாரியர்களுடனும் அவருக்கு ஏற்பட்ட சர்ச்சையினால் அவர் சோர்வடைந்து விட்டார் என்று அவர்கள் யூகித்தார்கள். தற்கொலை செய்வதைத் தவிர வேறு வழியற்ற நிலைக்குப் போய்விட்டார் என்று நினைத்தார்கள். நரகமோ அல்லது அழிவோ அவரை தற்கொலையைப் போல விழுங்கிவிடுமா? தங்களுடைய நீதியினிமித்தம் தங்களுக்கு ஒருபோதும் அப்படிப்பட்ட நிலை வராது என்று யூதர்கள் சிந்தித்தார்கள். ஆனால் கி. பி. 70ம் ஆண்டில் ரோமர்கள் எருசலேமை முற்றுகையிட்டபோது ஆயிரக்கணக்கான யூதர்கள் பஞ்சத்தினாலும் நம்பிக்கையின்மையினாலும் தற்கொலை செய்துகொண்டார்கள்.

யோவான் 8:23-24
23 அவர் அவர்களை நோக்கி: நீங்கள் தாழ்விலிருந்துண்டானவர்கள், நான் உயர்விலிருந்துண்டானவன்; நீங்கள் இந்த உலகத்திலிருந்துண்டானவர்கள், நான் இந்த உலகத்திலிருந்துண்டானவனல்ல. 24 ஆகையால் நீங்கள் உங்கள் பாவங்களில் சாவீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன்; நானே அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள் என்றார்.

இறைவனுடைய ஆளுகை நம்முடைய தீமை நிறைந்த உலகத்திற்கு மேலாக உண்மையாக இருக்கிறது என்று இயேசு அறிவித்தார். நாம் அனைவரும் மண்ணிலிருந்து, தாழ்விலிருந்து எடுக்கப்பட்டு கசப்பான சிந்தைகளினால் நிறைந்தவர்கள். பிசாசினுடைய வித்து அழுகிய பழங்களை நம்மில் உண்டுபண்ணுகிறது. சுபாவப்படி மனிதன் இறைவனுடைய ஆளுகையை உணர்ந்துகொள்ள முடியாது, அதன் இருப்பை அவன் மங்கலாக உணரலாம்.

கிறிஸ்து நம்முடைய உலகத்திற்குரியவர் அல்ல, அவருடைய ஆத்துமா பிதாவினிடத்திலிருந்து வருகிறது. பிதாவினுடைய ஆளுகை மேலே வைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு புவியியல் ரீதியாக மேலானது என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. நாம் உயர செல்லச் செல்ல எப்படி புவியீர்ப்பு சக்தி வலுவிழக்கிறதோ அதுபோல நாமும் இறைவனை நெருங்க நெருங்க நம்முடைய பாவம் நம்மைவிட்டு அகன்று விடும். நாம் தப்பிச்செல்ல முடியாத சிறையாக இவ்வுலகம் காணப்படுகிறது. நாம் இறைவனுடைய அன்புக்கு ஒப்புக்கொடுக்க மறுக்கும் சூழ்நிலையைச் சேர்ந்தவர்கள். நம்முடைய வாழ்க்கை முழுவதும் பாவத்தினால் நிறைந்திருக்கிறது. இந்த நிலையில் இயேசு “பாவங்கள்” என்று பன்மையில் பேசுகிறார். நாம் இறைவனை எதிர்ப்பதால் பல பாவங்களும் தவறுகளும் எழுகின்றது. காயங்களும் தழும்புகளும் நிறைந்த தொழுநோயாளியைப் போல நாம் இருக்கிறோம். அவர்கள் உயிரோடிக்கும்போதே அவர்களுடைய சரீரம் மெதுமெதுவாக இறப்பதைப் போல நாமும் இறந்துகொண்டிருக்கிறோம். நாம் பாவம் செய்த காரணத்தினால் நாம் சாகப் போகிறோம். பாவம் என்பது என்ன? கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டவன் என்றென்றைக்கும் வாழ்வான், இறைமகனுடைய இரத்தம் நம்மைப் பாவத்திலிருந்து சுத்திகரிக்கும். எனவே அவரை விசுவாசிக்காமல் இருப்பதே பாவம் ஆகும். அவருடைய வல்லமை நம்முடைய மனசாட்சியைச் சுத்திகரித்து, நம்முடைய சிந்தனைகளைப் பரிசுத்தப்படுத்துகிறது. யார் கிறிஸ்துவுக்குத் தூரமாக தங்களை விலக்குகிறார்களோ அவர்கள் மரணத்தைத் தெரிந்துகொள்கிறார்கள், பாவங்களின் சிறையில் நியாயத்தீர்ப்பிற்குக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசம் மட்டுமே நம்மை இறைவனுடைய கோபத்திலிருந்து காப்பாற்றும்.

தன்னை விசுவாசிக்கும்படி நம்மை அழைக்கும் இந்த இயேசு யார்? மறுபடியும் அவர் விளக்குகிறார்: “நானே அவர்” (யோவான் 6:20 மற்றும் 8:24). இவ்வாறு அவர் தன்னைப் பற்றிய மாபெரும் சாட்சிகள் அனைத்தையும் சுருக்கமாகக் கூறிப்பிடுகிறார். அவர் தன்னை சத்தியத்தின் ஆண்டவர் என்றும் உயிருள்ள இறைவன் என்றும் மோசேக்கு “இருக்கிறேன்” என்ற வார்த்தையின் மூலம் தன்னை வெளிப்படுத்திய பரிசுத்தர் என்றும் தன்னை அழைக்கிறார் (யாத். 3:14; ஏசாயா 43:1-12). வேறு யாரிலும் இரட்சிப்பு இல்லை. இந்த வார்த்தைகளை யூதர்களும் அறிந்திருந்தாலும் இறைவனுடைய நாமத்தை வீணில் வழங்கக்கூடாது என்பதற்காக அவர்கள் அதை உச்சரிப்பதில்லை. ஆனால் இயேசு பொதுமக்கள் நடுவில் தன்னை அந்தப் பெயரைக் கொண்டு அழைத்தார். அவர் இறைவனுடைய குமாரனாகிய கிறிஸ்து மட்டுமல்ல, அவரே மெய்யான இறைவனாகிய யாவே.

நற்செய்தியின் சுருக்கத் தொகுப்பே அவர்தான். மாம்சத்தில் வந்த இறைவனே கிறிஸ்து. அவரை விசுவாசிக்கிறவன் வாழ்வடைகிறான். அவரையும் அவருடைய அதிகாரத்தையும் புறக்கணிக்கிறவன் பாவமன்னிப்பை இழந்து போகிறான். விசுவாசம் அல்லது அவிசுவாசம் மனிதனுடைய முடிவை நிர்ணயிக்கிறது.

கேள்வி:

  1. “நானே அவர்” என்பவரை விசுவாசிப்பதன் பொருள் என்ன?

www.Waters-of-Life.net

Page last modified on August 01, 2012, at 08:14 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)