Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 046 (Sifting out of the disciples)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது (யோவான் 5:1 - 11:54)
ஆ - இயேசுவே ஜீவ அப்பம் (யோவான் 6:1-71)

5. சீடர்கள் சலித்தெடுக்கப்படல் (யோவான் 6:59-71)


யோவான் 6:59-60
59 கப்பர்நகூமிலுள்ள ஜெப ஆலயத்திலே அவர் உபதேசிக்கையில் இவைகளைச் சொன்னார். 60 அவருடைய சீஷரில் அநேகர் இவைகளைக் கேட்டபொழுது, இது கடினமான உபதேசம், யார் இதைக் கேட்பார்கள் என்றார்கள்.

இறைவனுடைய உணவு மற்றும் இயேசுவை உட்கொள்ளுதல் ஆகிய இந்தப் போதனை பல்வேறு சந்தர்ப்பங்களில் கொடுக்கப்பட்டது. சில கருத்துக்களை அவர் திரும்பக்கூறி, அதன் பொருளை மெதுவாக ஆழப்படுத்தினார். ஆகிலும் யோவான் இதை ஒரே கோர்வையாக சேர்த்து எழுதியுள்ளார். கப்பர்நகூமிலுள்ள ஜெபஆலயத்தில் அவர் இதை மறைமுகமாகப் போதித்து, தான் மோசேயைக் காட்டிலும் பெரியவர் என்றும் விசுவாசிகள் அவருடைய இரத்தத்திலும் சரீரத்திலும் பங்கடைய வேண்டும் என்று போதித்திருந்தார்.

அவரை உண்மையாகவே பின்பற்றியவர்களுக்குக்கூட அப்படிப்பட்ட வெளிப்பாடு புரிந்துகொள்ளக் கடினமாயிருந்தது. அவர்கள் சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்ப ஆரம்பித்தார்கள். அவர்கள் இறைவனுக்குக் கீழ்ப்படியவும் அவருக்குச் சேவை செய்யவும் ஆயத்தமாயிருந்தார்கள், ஆனால் அவருடைய இரத்தத்தைக் குடித்து மாம்சத்தைப் புசிக்க வேண்டும் என்ற முட்டாள்தனமான காரியத்தைக் கேட்டு குழப்பமடைந்தார்கள். அவர்கள் தங்கள் குழப்பத்தின் உச்சத்திலிருக்கும்போது கர்த்தர் கிருபையாக ஜீவ அப்பம் என்ற உவமையின் பொருளை அறிந்துகொள்ளும்படி அவர்களுடைய கண்களைத் திறந்தார்.

யோவான் 6:61-63
61 சீஷர்கள் அதைக்குறித்து முறுமுறுக்கிறார்களென்று இயேசு தமக்குள்ளே அறிந்து, அவர்களை நோக்கி: இது உங்களுக்கு இடறலாயிருக்கிறதோ? 62 மனுஷகுமாரன் தாம் முன்னிருந்த இடத்திற்கு ஏறிப்போகிறதை நீங்கள் காண்பீர்களானால் எப்படியிருக்கும்? 63 ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது.

இயேசு தம்முடைய சீடர்களுடைய சிந்தனையை அறிந்தார், அவர்களுடைய கேள்விகளுக்காக அவர்களை அவர் கடிந்துகொள்ளவில்லை. அவர்களுடைய முறைப்பாடு அவிசுவாசிகளுடையதைப்போல அவர்களுடைய முரண்பாட்டினால் வரவில்லை. இயேசுவின் இரகசியமான உதாரணத்தை அவர்களால் புரிந்துகொள்ள முடியாமையினால் வந்தது. அவர்களுக்கு அவர் விளக்கம் கொடுப்பதற்கு முன்பாக அந்த உவமையின் தெளிவற்ற தன்மையை விளக்குகிறார். முழு உலகத்தையும் இரட்சிக்கும் திட்டத்தைக் குறித்து விளக்குகிறார்.

அவர் தன்னுடைய சரீரத்தை அவர்கள் ஆவிக்குரிய நிலையில் உட்கொள்ள வேண்டும் என்பதற்காக மட்டும் அவர் மரிக்க மாட்டார். அவர் எங்கிருந்து இறங்கி வந்தாரோ அங்கு தன்னுடைய பிதாவினிடத்தில் ஏறிச்செல்வார். அவர் பரலோகத்திலிருந்து பூமிக்கு வந்திருந்தாலும் அவர் பூமியிலேயே தங்கியிருக்க மாட்டார். அவர் ஏரியில் நடந்ததை அவர்கள் கண்டு அவர் மனிதனைக் காட்டிலும் மேலானவர் என்பதை உணர்ந்துகொண்டார்கள். தன்னைப் பின்பற்றுபவர்களுக்குப் பரிசுத்த ஆவியைப் பொழிந்தருளுவதற்காக அவர் தமது பிதாவினிடத்தில் ஏறிச் செல்வார். இது தான் அவருடைய மரணத்தின் நோக்கம், அவருடைய வருகையின் திட்டம். அவர் தன்னுடைய மாம்சத்தை அவர்களுக்கு உண்ணக் கொடுப்பதில்லை, ஆனால் அவரைப் பின்பற்றுபவர்களின் உள்ளத்தில் அவர் வந்து தங்குகிறார். அதுவும் அவருடைய சரீரத்தினால் அல்ல, அவருடைய பரிசுத்த ஆவியினால்.

மாம்சம் ஒன்றுக்கும் உதவாது என்பதை இயேசு காண்பித்தார். ஆரம்பத்தில் நாம் முழுமையாகவும் சிறப்பாகவுமே உருவாக்கப்பட்டோம், ஆனால் நம்முடைய தன்மையும் சிந்தனைகளும் கெட்டுப்போனது. நம்முடைய உடலில் சரியான வாழ்வுக்கான சக்தியை நம்மால் காணமுடிவதில்லை. பாவம் செய்வதற்கான சக்திதான் இருக்கிறது. அவருடைய சொந்த உடலே பெலவீனமுடையதாயிருந்தது. அதனால்தான் “நீங்கள் சோதனைக்கு உட்படாதபடி விழித்திருந்து விண்ணப்பம் செய்யுங்கள், ஏனெனில் ஆவி உற்சாகமுள்ளதுதான் ஆனால் மாம்சமோ பெலவீனமுள்ளது என்று” கூறினார்.

இயேசு தன்னுடைய சரீரத்தில் எப்போதும் பரிசுத்த ஆவியானவரைச் சுமந்து திரிந்தார் என்பதற்காக இறைவனுக்கு துதியுண்டாகட்டும். அவருடைய ஆளத்துவத்தின் இரகசியமே ஆவியானவரின் பிரசன்னம்தான். அவ்விதமாகவே நம்முடைய சரீரத்தையும் பரிசுத்த ஆவியுடன் ஐக்கியப்படுத்த விரும்பி தன்னுடைய மரணம், அடக்கம் உயிர்த்தெழுதல் மற்றும் பரமேறுதலினால் தம்முடைய பரிசுத்த ஆவியானவரை பெலவீனமான நம்முடைய உடலில் வாழும்படி அனுப்பினார். முன்பு ஆவியினாலும் தண்ணீரினாலும் ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் அவன் இறைவனுடைய அரசைக் காணமாட்டான் என்று குறிப்பிட்டார். இதில் தண்ணீர் என்பது யோவானுடைய திருமுழுக்கையும் ஆவி என்பது பெந்தகொஸ்தே நாளில் அருளப்பட்ட பரிசுத்த ஆவியானவரையும் குறிக்கும். ஜீவ அப்பத்தைக் குறித்த இயேசுவின் பிரசங்கத்தின் சூழமைவைப் பார்க்கும்போது, அவர்கள் கர்த்தருடைய பந்தியில் பங்கெடுத்தபோது அவர் அவர்களிடம், அவர்கள் மீது வருவார் என்பதை விளக்கப்படுத்தினார். ஆனால் பரிசுத்த ஆவியானவர் வராவிட்டால் கர்த்தருடைய பந்தியில் இருக்கிற அடையாளங்களினால் எந்தப் பயனுமில்லை. பரிசுத்த ஆவியானவர்தான் உயிர்ப்பிக்கிறவர், சரீரம் ஒன்றுக்கும் உதவாது. கிறிஸ்துவின் ஆவி விசுவாசிகளில் வாசமாயிருப்பது கிறிஸ்துவின் பிரசன்னத்தை உறுதிசெய்கிறது.

பரிசுத்த ஆவியானவர் எவ்வாறு நம்மீது வருகிறார்? கிறிஸ்துவின் சரீரத்திலும் இரத்தத்திலும் பங்கடைந்து அவருடன் முழுமையான ஐக்கியத்தில் வாழ விரும்புகிறவர்களுக்கு இது மிகவும் முக்கியமான கேள்வியாகும். இயேசு எளிமையாக பதிலளிக்கிறார்: “என்னுடைய வார்த்தைகளைக் கேளுங்கள், நற்செய்தியின் பொக்கிஷங்களுக்கு உங்களைத் திறந்துகொடுங்கள்.” கிறிஸ்து இறைவார்த்தையாக இருக்கிறார்; அவருடைய வார்த்தைகளைக் கேட்டு அவரை நம்புகிறவர்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுகிறார்கள். பல வேத வசனங்களை மனப்பாடம் செய்வதன் மூலமாக உங்கள் உணர்வுகளை இறைவனுடைய வல்லமையினால் நிரப்புங்கள். இறைவனுடைய வாக்குத்தத்தத்தில் நிலைத்திருங்கள், அவற்றைப் பற்றிக்கொள்ளுங்கள், நீங்கள் பெரிய கண்டுபிடிப்பாளர்களைக் காட்டிலும் அவர்களுடைய கண்டுபிடிப்புகளைக் காட்டிலும் நீங்கள் சக்தியுள்ளவராவீர்கள். கிறிஸ்துவினுடைய விடுவிக்கும் வார்த்தைகளினால் அண்ட சராசரத்தின் படைப்பாளி உங்கள் மீது வந்து, உங்களுக்கு வாழ்வையும் அதிகாரத்தையும் தருவார்.

யோவான் 6:64-65
64 ஆகிலும் உங்களில் விசுவாசியாதவர்கள் சிலர் உண்டு என்றார்; விசுவாசியாதவர்கள் இன்னாரென்றும், தம்மைக் காட்டிக்கொடுப்பவன் இன்னானென்றும் ஆதிமுதலாக இயேசு அறிந்திருந்தபடியால், அவர் பின்னும்: 65 ஒருவன் என் பிதாவின் அருளைப் பெறாவிட்டால் என்னிடத்திற்கு வரமாட்டான் என்று இதினிமித்தமே உங்களுக்குச் சொன்னேன் என்றார்.

இயேசுவைப் பின்பற்றியவர்கள் அவருடைய முக்கிய போதனையின் கருத்தைப் புரிந்துகொள்ளாமல் அவரை விட்டு விலகிச் சென்றார்கள். அவருடைய உடலை உட்கொண்டு அவருடைய இரத்தத்தைப் பருக வேண்டும் என்ற போதனை அவருடைய கலிலேய ஊழியத்தில் முக்கியமான ஒன்றாகவும் பலர் அவரைவிட்டு விலகிச் சென்றமைக்கான காரணமாகவும் விளங்குகிறது. ஆகவே இந்தக் கலந்துரையாடலுக்குப் பிறகு அவருடைய சீடர்களின் எண்ணிக்கை குறைவடைந்தது. அவரை விட்டு விலகிச் சென்றவர்கள் நிபந்தனையற்ற முறையில் இயேசுவைச் சார்ந்திருந்து, மனிதனுடைய தர்க்கரீதியான அறிவின் எல்லைகளைக் கடக்க ஆயத்தமாயிருக்கவில்லை. அவருடைய தெய்வீகத் தன்மை என்ற சத்தியத்தை அவர்கள் கவனிக்கத் தவறி, அவருடைய பலியின் அடிப்படையில் அவருடன் ஒரு உடன்படிக்கையைச் செய்துகொள்ள அவர்கள் துணியவில்லை.

அவர்களில் சிலர் அவருடைய ஆவிக்கு எதிர்த்து நின்று விலகிச் செல்வார்கள் என்று அவர் தன்னுடைய சீடர்களிடம் சொன்னார். கர்த்தர் அங்கிருந்த ஒவ்வொருவருடைய இருதயத்திலும் இருக்கும் உணர்வுகளோடு அவர்களைப் பார்க்கக்கூடியவராக இருந்தார். ஆரம்பத்திலிருந்தே தன்னுடைய சீடர்கள் நடுவில் இருக்கும் துரோகியாகிய யூதாஸ் ஸ்காரியோத்தின் மனநிலையையும் அவர் அறிந்திருந்தார். கிறிஸ்துவினுடைய அன்பின் ஆவிக்கு யூதாஸ் முழுவதுமாக தன்னைத் திறந்துகொடுக்க விருப்பமில்லாதிருந்தான். இயேசு தன்னுடைய மரணத்தைப் பற்றிப் பேசும்போது உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று கூறியபோது அவர் அவனைப் பற்றி நன்கு அறிந்திருந்தார்.

அவர்களில் சிலர் அவருடைய ஆவிக்கு எதிர்த்து நின்று விலகிச் செல்வார்கள் என்று அவர் தன்னுடைய சீடர்களிடம் சொன்னார். கர்த்தர் அங்கிருந்த ஒவ்வொருவருடைய இருதயத்திலும் இருக்கும் உணர்வுகளோடு அவர்களைப் பார்க்கக்கூடியவராக இருந்தார். ஆரம்பத்திலிருந்தே தன்னுடைய சீடர்கள் நடுவில் இருக்கும் துரோகியாகிய யூதாஸ் ஸ்காரியோத்தின் மனநிலையையும் அவர் அறிந்திருந்தார். கிறிஸ்துவினுடைய அன்பின் ஆவிக்கு யூதாஸ் முழுவதுமாக தன்னைத் திறந்துகொடுக்க விருப்பமில்லாதிருந்தான். இயேசு தன்னுடைய மரணத்தைப் பற்றிப் பேசும்போது உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று கூறியபோது அவர் அவனைப் பற்றி நன்கு அறிந்திருந்தார்.

கேள்வி:

  1. வாழ்வைத் தரும் ஆவியானவர் கிறிஸ்துவின் சரீரத்தோடு எவ்வாறு இணைந்தார்?

www.Waters-of-Life.net

Page last modified on August 01, 2012, at 07:39 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)