Waters of Life

Biblical Studies in Multiple Languages

Search in "Tamil":
Home -- Tamil -- John - 044 (Jesus offers people the choice)
This page in: -- Albanian -- Arabic -- Armenian -- Bengali -- Burmese -- Cebuano -- Chinese -- Dioula? -- English -- Farsi? -- French -- Georgian -- Greek -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Javanese -- Kiswahili -- Kyrgyz -- Malayalam -- Peul -- Portuguese -- Russian -- Serbian -- Somali -- Spanish -- TAMIL -- Telugu -- Thai -- Turkish -- Twi -- Urdu -- Uyghur? -- Uzbek -- Vietnamese -- Yiddish -- Yoruba

Previous Lesson -- Next Lesson

யோவான் - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது
யோவான் எழுதின கிறிஸ்துவின் நற்செய்தியிலிருந்து வேதபாடங்கள்
பகுதி 2 - வெளிச்சம் இருளில் ஒளிர்கிறது (யோவான் 5:1 - 11:54)
ஆ - இயேசுவே ஜீவ அப்பம் (யோவான் 6:1-71)

4. ஏற்றுக்கொள் அல்லது நிராகரி என்ற விருப்பத் தேர்வை இயேசு மக்களுக்குக் கொடுக்கிறார் (யோவான் 6:22-59)


யோவான் 6:41-42
41 நான் வானத்திலிருந்து வந்த அப்பம் என்று அவர் சொன்னதினிமித்தம் யூதர்கள் அவரைக்குறித்து முறுமுறுத்து: 42 இவன் யோசேப்பின் குமாரனாகிய இயேசு அல்லவா, இவனுடைய தகப்பனையும் தாயையும் அறிந்திருக்கிறோமே; அப்படியிருக்க, நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன் என்று இவன் எப்படிச் சொல்லுகிறான் என்றார்கள்.

கலிலேயர்கள் யூதர்களுடைய இனக்குழுவைச் சேராதவர்களாயிருந்தபோதிலும், நற்செய்தியாளனாகிய யோவான் அவர்களை யூதர்கள் என்றே அழைக்கிறார். ஆனால் அவர்கள் கிறிஸ்துவின் ஆவியைப் புறக்கணித்தபடியால் அவர்கள் தெற்கில் வாழ்ந்த யூதர்களைக் காட்டிலும் சிறந்தவர்கள் அல்ல.

வேதபாரகர் இயேசுவைப் புறக்கணிப்பதற்கு இன்னொரு காரணத்தை உருவாக்கினார்கள். ஏனெனில் அவர்களுடைய சட்டரீதியான சிந்தனையும் அவர்கள் தங்களைத் தாங்களே புதுப்பித்துக்கொள்ள நினைத்ததும் இயேசுவின் அன்புடன் முரண்பட்டு நின்றது. ஆனால் கலிலேயர்கள் இயேசுவின் சமூகத்தின் அடிப்படையில் அவரை நிராகரித்தார்கள். அவருடைய தகப்பன் (தச்சனாகிய யோசேப்பு) அவர்கள் நடுவில் வாழ்ந்தவர், எளிமையானவர், தீர்க்கதரிசனம் அல்லது சிறப்பான வரங்கள் எதுவும் இல்லாதவர். அவருடைய தாயார் எந்தவகையிலும் மற்றப் பெண்களைவிட சிறந்தவர் அல்ல. அவர் விதவையாக இருந்தார். அது அந்நாட்களில் இறைவனுடைய கோபத்தின் அடையாளமாகக் கருதப்பட்டது. இக்காரணங்களால் கலிலேயர்கள் இயேசுவே பரலோக உணவு என்பதை விசுவாசிக்கவில்லை.

யோவான் 6:43-46
43 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: உங்களுக்குள்ளே முறுமுறுக்கவேண்டாம். 44 என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன். 45 எல்லாரும் தேவனாலே போதிக்கப்பட்டிருப்பார்கள் என்று தீர்க்கதரிசிகளின் ஆகமத்தில் எழுதியிருக்கிறதே; ஆகையால் பிதாவினிடத்தில் கேட்டுக் கற்றுக்கொள்ளுகிறவன் எவனும் என்னிடத்தில் வருகிறான். 46 தேவனிடத்தினின்று வந்தவரே தவிர வேறொருவரும் பிதாவைக் கண்டதில்லை, இவரே பிதாவைக் கண்டவர்.

இயேசு தன்னுடைய பிறப்பின் அதிசயத்தை அவர்கள் விசுவாசிக்க மாட்டார்கள் என்பதால் அதை அவர்களுக்கு விளக்க முற்படவில்லை. மனிதனாகிய இயேசுவின் தெய்வீகத் தன்மையை பரிசுத்த ஆவியானவரின் துணையின்றி நம்மாலும் புரிந்துகொள்ள முடியாது. யாரெல்லாம் விசுவாசத்தோடு அவரிடத்தில் வருகிறார்களோ அவர்கள் இந்த மாபெரும் உண்மையை அறிந்துகொள்வார்கள்.

இயேசு தன்னுடைய பிறப்பின் அதிசயத்தை அவர்கள் விசுவாசிக்க மாட்டார்கள் என்பதால் அதை அவர்களுக்கு விளக்க முற்படவில்லை. மனிதனாகிய இயேசுவின் தெய்வீகத் தன்மையை பரிசுத்த ஆவியானவரின் துணையின்றி நம்மாலும் புரிந்துகொள்ள முடியாது. யாரெல்லாம் விசுவாசத்தோடு அவரிடத்தில் வருகிறார்களோ அவர்கள் இந்த மாபெரும் உண்மையை அறிந்துகொள்வார்கள்.

இறைவன் தன்னுடைய அன்பினால் மக்களை இயேசுவாகிய இரட்சகரிடம் இழுக்கிறார். எரேமியா 31:3ல் வாசிக்கிறபடி அவர்களுக்கு வெளிச்சத்தைக் கொடுத்து தனிப்பட்ட முறையில் அவர்களுக்குப் போதிக்கிறார். புதிய ஏற்பாட்டில் மனிதனுடைய சித்தமோ அல்லது சிந்தையோ விசுவாசத்தைக் கொண்டுவருவதில்லை. மாறாக பரிசுத்த ஆவியானவர்தான் நமக்குள் ஒளிவீசி, நமக்குள் தெய்வீக வாழ்வை உண்டுபண்ணி, வல்லமையுள்ள இறைவனே உண்மையான இறைவனும் நம்முடைய பிதாவுமானவர் என்று நம்மை உணரச் செய்கிறார். அவர் தம்முடைய பிள்ளைகளுக்குக் கற்பித்து, அவர்களுடன் நேரடியான உறவை வைத்திருக்கிறார். ஆவியானவருடைய அழைப்பின் மூலமாக அவர் விசுவாசத்தை நம்முடைய இருதயத்திலே படைக்கிறார். அவருடைய அழைப்பை உங்கள் மனசாட்சியில் என்றாவது உணர்ந்திருக்கிறீர்களா? இறைவனுடைய அன்பின் அசைவாடுதலுக்கு நீங்கள் உங்களைத் திறந்துகொடுக்கிறீர்களா?

பிதாவின் ஆவியானவர் இயேசுவிடம் நம்மை நடத்தி, அவரை நோக்கி நம்மை நகர்த்துகிறார். நாம் இயேசுவைச் சந்தித்து அவரை நேசிக்குமளவும் அவரைக் குறித்த விருப்பத்தை நம்மில் தூண்டி விடுகிறார். நாம் இருக்கும் வண்ணமாகவே அவர் நம்மை ஏற்றுக்கொள்கிறார். அவர் நம்மைப் புறம்பே தள்ளுவதில்லை. அவருடைய பிதாவின் மகிமையில் நாம் நுழையும்படி அவருடைய உயிர்த்தெழுதலில் பங்கடைவதற்காக அவர் நமக்கு நித்திய வாழ்வைக் கொடுக்கிறார்.

இருப்பினும் இயேசுவுக்கும் மறுபிறப்படைந்த விசுவாசிக்கும் இடையில் ஒரு வித்தியாசம் இன்னும் இருக்கிறது. குமாரனைத் தவிர இறைவனைக் கண்டவர் எவரும் இல்லை. அவர் ஆதிமுதல் பிதாவுடன் இருந்து அவரைக் கண்டிருக்கிறார். பிதாவும் குமாரனும் பிரிக்க முடியாதவர்கள். இயேசு பரலோக சமாதானத்திலும் அனைத்து தெய்வீக குணாதிசயங்களிலும் பங்கடைகிறார்.

யோவான் 6:47-50
47 என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 48 ஜீவ அப்பம் நானே. 49 உங்கள் பிதாக்கள் வனாந்தரத்திலே மன்னாவைப் புசித்திருந்தும் மரித்தார்கள். 50 இதிலே புசிக்கிறவன் மரியாமலிருக்கும்படி வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே.

இயேசு தனக்கும் பிதாவுக்கும் இருக்கின்ற ஐக்கியத்தையும் அவருடைய வார்த்தைகளைக் கேட்கிறவர்களில் பரிசுத்த ஆவியானவர் செயல்படுவதையும் பற்றி விளக்கிவிட்டு, அவர்கள் தன்னை விசுவாசிக்கும்படி அவர் தன்னுடைய அடிப்படைத் தன்மையைக் குறித்த சத்தியத்தை அவர்களுக்கு முன்வைத்தார். கிறிஸ்தவ கொள்கையை அவர் சுருக்கமாக விளக்கினார்: இயேசுவை விசுவாசிக்கிறவர்கள் என்றும் வாழ்வார்கள். இந்த சத்தியத்தின் நிச்சயத்தை மரணத்தாலும் மறுக்க முடியாது.

இயேசு பரலோகத்திலிருந்து உலகத்திற்கு இறைவனால் அனுப்பப்பட்ட உணவைப் போல இருக்கிறார். ஐயாயிரம் பேருக்கு உணவளித்த அற்புதத்தில் இயேசுவின் கரங்களில் வந்த உணவு எப்படி முடிவின்றி மனிதர்களுடைய பசியைத் தீர்த்ததோ அப்படியே, தெய்வத்துவத்தின் பரிபூரணமெல்லாம் அவருக்குள் வாசமாயிருக்கிற காரணத்தினால் எல்லாக் காலத்திற்கும் இயேசு முழு உலகத்தின் தேவைக்கும் போதுமானவராயிருக்கிறார். அவரிடமிருந்து நீங்கள் நம்பிக்கை, சந்தோஷம் மற்றும் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்கிறீர்கள். ஒரே வரியில் சொன்னால், உலகத்திற்கான இறைவனுடைய வாழ்வு அவர்தான், ஆனால் உலகமோ அவரை நிராகரித்தது.

வனாந்தரத்தில் மன்னா வானத்திலிருந்து இறைவனுடைய கொடையாக கொடுக்கப்பட்டது; ஆனால் இந்த ஏற்பாடு கொஞ்ச காலம்தான் நிலைத்தது. அதை உண்டவர்கள் அனைவரும் இறந்து போனார்கள். அவ்விதமாகவே இன்று நாம் காணும் நற்பணிகள், தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் அனைத்தும் சில காலம், அதுவும் அரைகுறையாகவே நமக்கு உதவக்கூடியவை. இந்த தொழிற்சாலைகளில் மரணத்திற்கு மருந்தோ பாவத்திற்குத் தீர்வோ கிடையாது. ஆனால் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்பவர்கள் இறப்பதில்லை. உங்களில் வந்து வாழ்வதில் கிறிஸ்துவின் நோக்கம் இதுதான். மற்ற எந்த ஆவியும் உங்களை ஆளக்கூடாது என்பதற்காக அவர் தனிப்பட்ட முறையில் உங்களில் வந்து வாழ விரும்புகிறார். அவர் உங்களிலுள்ள எல்லா தீய விருப்பங்களையும் அணைத்துப் போட்டு, உங்கள் பயங்களை நீக்கி, உங்கள் பெலவீனத்தில் உங்களை பெலப்படுத்துவார். உங்களுக்காக ஏற்படுத்தப்பட்ட இறைவனுடைய உணவு அவரே. மற்ற பாவிகளைப்போல நீங்களும் சாகாமல் இருக்க வேண்டுமாயின் அவரை உட்கொண்டு வாழ்வடையுங்கள்.

கேள்வி:

  1. இயேசுவின் போதனையைக் கேட்டவர்களுடைய முறுமுறுப்புக்கு அவர் எவ்வாறு பதிலுரைத்தார்?

www.Waters-of-Life.net

Page last modified on July 31, 2012, at 11:34 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)